பிரம்மாண்ட பார்ட்டி.. பாலிவுட் நடிகைகள் கட்டிப்பிடித்து வாழ்த்து.. என்னம்மா வாழ்றாரு கரண் ஜோஹர்!

மும்பை: பாலிவுட் திரையுலகின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு யஷ் ராஜ் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட பார்ட்டி நடைபெற்றது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா, கஜோல், மலைகா அரோரா, ரவீணா டாண்டன், பரிணீத்தி சோப்ரா என ஏகப்பட்ட பேர் இந்த பார்ட்டியில் கண்கவர் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டனர்.

பர்த்டே பேபியான கரண் ஜோஹரை பலரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த பார்ட்டி புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

கரண் ஜோஹர் 50வது பிறந்தநாள்

கரண் ஜோஹர் 50வது பிறந்தநாள்

1998ம் ஆண்டு ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியான குச் குச் ஹோத்தா ஹை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கரண் ஜோஹர். தர்மா புரொடக்‌ஷன் எனும் தயாரிப்பு கம்பெனியை நடத்தி வரும் அவர் ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளை திரையில் அறிமுகப்படுத்தி உள்ளார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் இனிமேல் பங்கேற்க போவதில்லை என சமீபத்தில் அதிரடியாக அறிவித்த கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த பாலிவுட்டும் கலந்து கொண்ட பிரம்மாண்ட பார்ட்டி நேற்று இரவு நடைபெற்றது.

பிரம்மாண்ட பார்ட்டி

பிரம்மாண்ட பார்ட்டி

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா, கஜோல், மலைகா அரோரா, ரவீணா டாண்டன், பரிணீத்தி சோப்ரா என ஒட்டுமொத்த பாலிவுட்டின் நட்சத்திர பட்டாளமும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டது. 5 டயர் கேக்குடன் ஏகப்பட்ட மது விருந்துகளும் களைகட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிக்கேற்றிய கியாரா அத்வானி

கிக்கேற்றிய கியாரா அத்வானி

உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் பிளேசரை மட்டுமே அணிந்து கொண்டு கரண் ஜோஹரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கியாரா அத்வானி கலந்து கொண்டார். பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த பார்ட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாலிவுட் நடிகைகள் எல்லாம் போட்டா போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளனர்.

கட்டிப்பிடித்து போஸ்

கட்டிப்பிடித்து போஸ்

பாலிவுட்டின் மிகப்பெரிய புள்ளியாக விளங்கும் கரண் ஜோஹரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயதேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென்னாக மிரட்டிய நடிகை ரவீணா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் கரண் ஜோஹரை கட்டிப் பிடித்து போஸ் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

சார்மியுடன் கரண் ஜோஹர்

சார்மியுடன் கரண் ஜோஹர்

பச்சை நிற க்ளிட்டர் உடையில் தனது 50வது பிறந்தநாளை 5 அடுக்குகள் கொண்ட காஸ்ட்லி கேக்கை வெட்டிக் கொண்டாடிய கரண் ஜோஹர் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த அனைத்து பிரபலங்களையும் வரவேற்று மகிழ்ந்தார். நடிகையும் விஜய தேவரகொண்டாவின் லைகர் படத்தின் தயாரிப்பாளருமான சார்மி கரண் ஜோஹரை கட்டிப்பிடித்து உம்மா கொடுப்பது போல கொடுத்த போஸ் எல்லாம் தீயாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X