என்னம்மா டிசைன் இது … தீபிகா படுகோனேவின் அதிரிபுதிரி போட்டோஸ் !

மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த 83 படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.

தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் 63 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள தீபிகா கொஞ்சம் ஆபாசமான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட்டில் எத்தனை பிரபலங்கள் இருந்தாலும் தீபிகா படுகோனே என்றால் கொஞ்சம் ஸ்பெஷ்ல் தான். இந்தியே தெரியவில்லை என்றாலும் இவர் இவரின் அழகை பார்ப்பதற்கும், நடிப்பை வாவ்.. சூப்பர் என்று ரசிப்பதற்கும் தனிக்கூட்டம் உண்டு. வசனமா சார் முக்கியம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

ஓம் ஷாந்தி ஓம்

ஓம் ஷாந்தி ஓம்

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் தனக்கான தனி இடத்தைப்பிடித்தார் தீபிகா படுகோன்.

லுங்கி டான்ஸ்

லுங்கி டான்ஸ்

இந்தி திரைப்படத்தில் கொடிகட்டிப்பறந்த தீபிகான, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் கணிசமான இடம் பிடித்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதையடுத்து அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

முக்கோண காதல்

முக்கோண காதல்

தற்போது இவர்,சித்தார் சதுர்வேதியுடன் இணைந்து ஒரு முக்கோண காதல் திரைப்படமான கெஹரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். சகோதரியின் காதலனை ஆட்டையை போட்டு அவருடன் நெருக்கமாக பழகுகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தையை வாய் பிளக்க வைத்தது. கெஹரியான் திரைப்படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.

ஹாலிவுட் நாயகி

ஹாலிவுட் நாயகி

தற்போது, இவர் தாறுமாறான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்களைப் பார்த்தால் பாலிவுட் நாயகி போல இல்லாமல் ஹாலிவுட் நாயகி போல இருக்கிறார். அதனாலோ என்னவோ 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X