ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிரபல பாலிவுட் பெண் இயக்குநர் ஃபரா கானுக்கு கொரோனா பாதிப்பு
மும்பை: ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் பெண் இயக்குநர் ஃபரா கானுக்கு (Farah Khan) கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநரான ஃபரா கான் அடிக்கடி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட நிலையில், தனக்கு கொரோனா பாதித்துள்ளது குறித்து அவர் போட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக நாடு முழுவதும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 50 சதவீதங்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. மேலும், கடற்கரை, கேளிக்கை பூங்காக்கள் என ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரே நாளில் மீண்டும் இந்தியாவில் 41,965 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஃபரா கானுக்கு கொரோனா
பிரபல பாலிவுட் நடன இயக்குநரும் ஷாருக்கானின் சூப்பர் ஹிட் படங்களான ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான ஃபரா கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

டபுள் டோஸ்
சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோ என பிசியாக இருக்கும் ஃபரா கான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார். மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட டீமுடன் தான் வேலை பார்த்து வருகிறேன். ஆனாலும், எப்படியோ இந்த கொரோனா பரவி விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்கிரதையா இருங்க
ஜீ காமெடி ஷோவின் நடுவராக இருந்து வரும் ஃபரா கான் சமீபத்தில் ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். அதே போல அமிதாப் பச்சனின் குரோர் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை செக் செய்து கொள்ளுங்கள் என்றும், கொரோனா குறைந்து விட்டதாக எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம், ரொம்ப ஜாக்கிரதையா இருங்க என்றும் கூறியுள்ளார்.
Recommended Video

3 குழந்தைகள்
இயக்குநர் சிரிஷ் குந்தரை திருமணம் செய்து கொண்ட ஃபரா கான் மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். ஆண் குழந்தையின் பெயர் சீசர், இரு பெண் குழந்தைகளின் பெயர்கள் திவா மற்றும் அன்யா. ஜி காமெடி ஷோவில் ஃபரா கானுக்கு பதிலாக மிகா சிங் நடுவராக செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











