Director Anurag Kashyap: தமிழில் இயக்குநராக களமிறங்கும் அனுராக் காஷ்யப்.. யாரு ஹீரோ தெரியுமா?

சென்னை: நடிகர் அனுராக் காஷ்யப் இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குநராக அறியப்படுகிறார். பாலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழிலும் இமைக்கா நொடிகள், லியோ போன்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Bollywood director Anurag Kashyap going to debut in Kollywood as director with GV Prakash lead

முன்னதாக இவரது கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிஜிஎம் அமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார். தான் இசையமைக்கும் படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இசை அசுரன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிப்பிலும் அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் கமிட்டாகி வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். வெயில் படத்தில் இசையமைப்பாளராக தொடங்கிய இவரது பயணம் தொடர்ந்து 20 ஆண்டுகளை எட்டவுள்ளது.

Bollywood director Anurag Kashyap going to debut in Kollywood as director with GV Prakash lead

அடுத்தடுத்த படங்கள்: கடந்த 2015ம் ஆண்டில் டார்லிங் என்ற படத்தின்மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்த ஜிவி பிரகாஷ், தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது 25வது படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்திற்கு கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல் பிரகாஷ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தை ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார்.

கலவையான விமர்சனம் பெற்ற அடியே: நடிப்பு, தயாரிப்பு, பாடகர் என பன்முகம் காட்டி வரும் ஜிவி பிரகாஷ், தொடர்ந்து மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து பல வெற்றிப் படைப்புகளை கொடுத்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள வணங்கான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் இவர் இசையமைத்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அடியே படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் ரிபெல் படத்தில் இணைந்துள்ளார்.

அனுராக்குடன் இணையும் ஜிவி பிரகாஷ்: இந்தப் படத்தின் சூட்டிங்கும் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரின் தயாரித்துள்ளது. அடுத்தடுத்து இசையமைப்பு மற்றும் நடிகர் என கமிட்டாகி நடித்து வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் இணையவுள்ளார். இந்தப் படத்தின்மூலம் தமிழில் இயக்குநராக அனுராக் காஷ்யப் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஜிவி பிரகாஷ் உற்சாகம்: பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாகவுள்ள நிலையில் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள ஜிவி பிரகாஷ், மிகுந்த உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் பிஜிஎம்மை தான் உருவாக்கியதையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X