twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காப்பிரைட் பிரச்சனை.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பிரபல இயக்குநர்!

    |

    மும்பை: பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது காப்புரிமையை மீறியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சுனில் தர்ஷன் இயக்கிய பாலிவுட் படத்தின் உரிமையை யாருக்கும் அவர் விற்காத நிலையில், யூடியூபில் அந்த படம் முறைகேடாக பதிவேற்றப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    சுந்தர் பிச்சை மட்டுமின்றி யூடியூப் தலைமை அதிகாரி மற்றும் மேலும், 5 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் இயக்குநர் சுனில் தர்ஷன்.

    கோவாவில் காதலரை மணந்தார் நாகினி நடிகை மெளனி ராய்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்கோவாவில் காதலரை மணந்தார் நாகினி நடிகை மெளனி ராய்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்

    சுந்தர் பிச்சை மீது வழக்கு

    சுந்தர் பிச்சை மீது வழக்கு

    கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் காப்புரிமையை மீறியதாக வழக்கு தொடர்ந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது படத்தை யூடியூபில் அனுமதியின்றி பதிவேற்றம் செய்த விவாகரத்தில் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.

    யூடியூப் தலைமை அதிகாரி மீதும்

    யூடியூப் தலைமை அதிகாரி மீதும்

    கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான யூடியூபில் அந்த படம் தனது அனுமதியில்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு 1 பில்லியம் இம்பிரஷன்களை கடந்து நல்ல வருமானத்தை பெற்றுத் தந்துள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த அவர் சுந்தர் பிச்சை, யூடியூப் தலைமை அதிகாரி கெளதம் ஆனந்த் மற்றும் யூடியூப் நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    என்ன படம்

    என்ன படம்

    கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் சுனில் தர்ஷன் இயக்கத்தில் வெளியான ஏக் ஹசினா தி ஏக் திவானா எனும் இந்தி படத்தை இயக்குநர் யாரிடத்திலும் விற்காத நிலையில், அந்த படம் யூடியூபில் அனுமதியின்றி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷிவ் தர்ஷன், நடாஷா ஃபெர்னாண்டஸ் மற்றும் உபேன் பட்டேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பத்மபூஷன் விருது

    பத்மபூஷன் விருது

    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு சமீபத்தில் தான் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் தொடடுத்துள்ள காப்புரிமை அத்துமீறல் வழக்கு பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    English summary
    Bollywood Director Suneel Darshan filed case against Google’s Sundar Pichai over copyright infringement case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X