நயன்-விக்கிக்கு திருமண வாழ்த்து சொன்ன..பாலிவுட் பிரபல நடிகை !
மும்பை: புதுமணத் தம்பதிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காதல் புறாவாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த மாதம் ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தில் முக்கியமான விஐவிபிக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

தாய்லாந்தில் ஹனிமூன்
திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சுவாமி தரிசணம் செய்த இவர்கள். தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடினார்கள். விக்கியும்,நயனும் தாய்லாந்தில் இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிவைரலானது. அந்த புகைப்படத்தில், கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டுமே போட்டுக்கொண்டு கொஞ்சம் கூட மேக்கப்பே இல்லாமல் க்யூட்டாக இருந்தார்.

ஷாருக்கன் டபிள் ஆக்ஷன்
தேனிலைவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நயன்தாரா, அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளால் தாமதமாகி வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷாருக்கன் இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாழ்த்து நடிகை
இந்நிலையில், நயன்தாராவும், விக்கியும் தற்போது மும்பையில் இருக்கிறார்கள். நேற்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், புதுமண தம்பதிகள் ஜோடியாக வெளியில் சென்றுள்ளனர். அப்போது, பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை சந்துள்ளனர். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ள மலைக்கா, "வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ்.. உங்கள் இருவரையும் சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது," என அவர் பதிவிட்டுள்ளார்.

டிராண்டாகும் புகைப்படம்
இந்த புகைப்படத்தில், மலைக்கா சாடின் உடையில் ஸ்டைலாக இருக்கிறார். நயன்தாரா கறுப்பு டேங்க் டாப் மற்றும் ஆலிவ் கிரீன் பேன்ட்களில் கூலாக நிற்கிறார். பர்கண்டி சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவித்து வரும் நிலையில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











