ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் அதிரடி கைது.. போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியதால் நடவடிக்கை!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் போதைப் பொருள் பார்ட்டியில் ஆர்யான் கான் கலந்து கொண்டதாகவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் இருந்து ஆர்யான் கானை போலீசார் கைது செய்து மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம்

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம்

நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியானதை அடுத்து பாலிவுட், சாண்டில்வுட் மற்றும் டோலிவுட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பயங்கர சோதனை நடத்தி வருகின்றனர். பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் பெயர்கள் இந்த விவாகரத்தில் அடிபட்டுள்ளன.

சுஷாந்த் மரணம்

சுஷாந்த் மரணம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணைக்கு பிறகு தான் பாலிவுட்டில் போதை மாஃபியா எந்த அளவுக்கு தலைவிரித்து ஆடுகிறது என்பது அம்பலம் ஆனது. நடிகை ரியா சக்கரவர்த்தி முன்னதாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறை தண்டனை பெற்றார்.

தீபிகா முதல் ரகுல் வரை

தீபிகா முதல் ரகுல் வரை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் போதைப் பொருள் வாட்ஸ் அப் குழுவின் தலைவியே என்கிற தகவலும் வெளியானது. மேலும், நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகளும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.

ஷாருக்கான் மகன் கைது

ஷாருக்கான் மகன் கைது

இந்நிலையில், போதைப் பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர். காலை முதலே அவரிடம் இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

ஆர்யான் கான் போதைப் பொருளை பயன்படுத்தியதற்கு ஏகப்பட்ட மொபைல் கால் மற்றும் மெசேஜ் ஆதாரங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும் நிலையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்யும் வகையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X