பாலிவுட் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் கூட சேர்ந்து நடிக்குறதுல ஈகோவா?: ஓப்பனாக பேசிய விக்ரம் வேதா பட ஹீரோ!
மும்பை: பாலிவுட் நடிகர் சஃயிப் அலிகான் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.
சஃயிப் அலிகான் தற்போது தமிழில் வெற்றிப் பெற்ற 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சஃயிப் அலிகான் மாதவன் பாத்திரத்திலும், ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதியின் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

பிரபலங்களின் வாரிசு
1993ல் வெளியான 'பரம்பரா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சஃயிப் அலிகான். பிரபல நட்சத்திர தம்பதியினரின் வாரிசு என்ற உண்மை பலருக்கும் தெரியாது. முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி, பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகன் தான் இந்த சஃயிப் அலிகான். பிரபலங்களின் வாரிசாக இருந்தாலும், முன்னணி ஹீரோ என்ற இடத்தை சஃயிப் அலிகான் பிடிக்கவில்லை என்றே, பாலிவுட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

கரீனா கபூர், சாரா அலிகான்
சஃயிப் அலிகானுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதைத் தொடர்ந்து, பாலிவுட் குயின் கரீனா கபூரை மறுமணம் செய்துகொண்டார். கரீனா கபூர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத க்ளாமர் குயின் மட்டும் அல்லாமல், சிறந்த நடிகையும் கூட. அதேபோல் சஃயிப் அலிகானின் மகள் சாரா அலிகானும் பாலிவுட்டின் இளம் நடிகையாக கலக்கி வருகிறார்.

சஃயிப் அலிகானின் சூப்பர் ஹிட்ஸ்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கு, சஃயிப் அலிகான் என்றும் தயங்கியதே இல்லை. அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான் என சூப்பர் ஸ்டார்களின் பல படங்களில் நடித்துள்ளார். சஃயிப் அலிகானின் காமெடிக்கு, இந்தியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேநேரம், சஃயிப் அலிகான் ஹீரோவாக நடித்த காக்டெய்ல், கோ கோவா கான், தில் சாஹ்தா ஹை போன்ற படங்கள், சூப்பர் ஹிட் அடித்தன.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்
இந்நிலையில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து மிரட்டிய 'விக்ரம் வேதா' படம், தமிழில் மாஸ் காட்டியிருந்தது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில், சஃயிப் அலிகான் தற்போது நடித்து முடித்துள்ளார். தமிழில் மாதவன் நடித்த கெத்தான விக்ரம் என்ற போலீஸ் கேரக்டரில், சஃயிப் அலிகான் நடித்துள்ளார். இந்த கேரக்டர் அவருக்கு சூப்பர் கம்பேக் கொடுக்கும் என, ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹிருத்திக் ரோஷனுடன் கூட்டணி
அதேபோல், 'விக்ரம் வேதா' இந்தி வெர்ஷனில், விஜய் சேதியின் வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மரண மாஸாக இருந்தது. அதனால், ஹிருத்திக்கின் நடிப்பில் இந்த கேரக்டரை காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். சஃயிப் அலிகான், ஹிருத்திக் ரோஷன் இருவரும் 'ந தும் ஜானோ ந ஹம்' படத்தில் ஏற்கனவே நடித்துள்ளனர்.

சேர்ந்து நடிப்பதில் ஈகோவா?
இந்நிலையில், ஹிருத்திக் ரோஷனுடன் சேர்ந்து நடித்தது குறித்தும், சஃயிப் அலிகானிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள சஃயிப், "ஹிருத்திக் ரோஷன் எப்பவுமே பாலிவுட்டின் டாப் ஸ்டார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் அளவிற்கு நான் வர இன்னுமே நிறைய உழைக்க வேண்டும்" என ஒப்பனாகக் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், "அவருடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு ஈகோ இல்லை" எனவும் சஃயிப் அலிகான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











