இது குழந்தைகள் பிறக்கும் வாரம்.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து அட அந்த டாப் ஹீரோவும் அப்பா ஆகிட்டாரே!
மும்பை: அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் ஹீரோ வருண் தவானுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகரான வருண் தவான் நடாஷா தலால் என்பவரை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வருண் தவான் கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், தாயும் சேயும் நலம் என தற்போது சந்தோச அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளார் பேபி ஜான் பட ஹீரோ.
பாலிவுட் நடிகர்: 37 வயதாகும் பாலிவுட் நடிகர் வருண் தவான் அட்லீ தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் காலீஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துல ஒரு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடித்து வருகின்றனர். 2010ம் ஆண்டு வெளியான ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய வருண் தவான் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
செம டான்சர்: ரெமோ டிசோசா இயக்கத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து வருண் தவான் நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வேற லெவல் டான்ஸ் பாடல்களாக அமைந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீட் டான்சர் 3d படத்திலும் வருண் தவான் அட்டகாசமாக டான்ஸ் ஆடி இருப்பார்.
சமந்தாவுடன் இணைந்து: பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் படத்துக்கு வாய்ஸ் கொடுத்த வருண் தவான் சமந்தாவுடன் இணைந்து சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வெப் சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சமந்தா, கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய நடிகைகளுடன் அதிகம் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
நடாஷாவுடன் திருமணம்: தன்னை விட ஒரு வயது குறைவான நடாஷாவை காதலித்து வந்த பாலிவுட் நடிகர் வருண் தவான் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இரண்டு ஆண்டுகளாக ஹனிமூன் பறவைகளாக பல இடங்களுக்கு சுற்றித் திரிந்த இருவரும் தற்போது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைுத்துள்ளனர்.
பெண் குழந்தை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜூன் இரண்டாம் தேதி மூன்றாவதாக குழந்தை பிறந்தது. குகனை தொடர்ந்து இன்னொரு ஆண் குழந்தை சிவகார்த்திகேயனுக்கு பிறந்தது. ஜூன் மூன்றாம் தேதி வருண் தவான் மனைவி நடாஷா பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் வருண் தவான் அந்த சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ், அட்லீ, வாமிகா கபி உள்ளிட்ட பிரபலங்கள் வருண் தவானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











