முன்னாள் மனைவிகள் குறித்து பேசிய பாலிவுட் ஹீரோ: அவரால மட்டும் தான் இப்படியெல்லாம் பேச முடியும்!
மும்பை: அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது.
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில், அமீர் கான் கலந்துகொண்டு மனம் திறந்துள்ளார்.
அதில், அவர் தனது முன்னாள் மனைவிகள் குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரொமாண்டிக் ஹீரோ
பாலிவுட் உலகின் ரொமாண்டிக் ஹீரோக்களில் அமீர்கானும் தவிர்க்க முடியாதவர். இவருக்கு ரசிகர்களை விடவும் பெண் ரசிகைகள் ஏராளம். ஷாருக்கான், சல்மான் கானுக்குப் பிறகு இந்தி திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கான் நடிகர்களில் அமீர் கானுக்கும் கண்டிப்பாக இடம் உண்டு.

புதிய முயற்சிகளும் வெற்றிகளும்
அமீர் கான் தனது படங்களில் புதிய முயற்சிகளை செய்துப்பார்க்க தயங்கியதே இல்லை. ஒருவகையில் இவரை நம்மூர் உலக நாயகன் கமலுடன் ஒப்பிட்டுக் கூறலாம். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள தரமான பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், இவரது 'லகான்' படம் ஆஸ்கர் வரை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுதவிர, 'ரங் தே பசந்தி', 'ஃபனா', '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பார்', 'பீகே' என தரமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அமீர்கானும் சர்ச்சைகளும்
பாலிவுட்டில் அமீர்கான் எந்தளவிற்கு முன்னணி நடிகராக வலம் வருகிறாரோ, அதற்கு குறையாமல் அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளுடன் அவர் நெருக்கம் காட்டியதாக, பலமுறை கிசுசிசுக்கள் எழுந்தன. இதனிடையே அவருக்கு ரீனா துத்தா, கிரண் ராவ் ஆகியோருடன் திருமணம் ஆகி, பின்னர் விவாகரத்தும் ஆனது. அதுமட்டும் இல்லாமல் அமீர்கானுக்கும் 'தங்கல்' படத்தில் அவருக்கு மகளாக நடித்த இளம் நடிகைக்கும் காதல் எனவும் சொல்லப்படுகிறது.

காஃபி வித் கரணில் அமீர்கான்
இந்நிலையில், வரும் 11ம் தேதி அமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் வெளியாகவுள்ளது. அமீர்கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனையடுத்து இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில், அமீர்கான் பங்கேற்றிருந்தார்.

முன்னாள் மனைவிகள் குறித்து
இந்நிகழ்ச்சியில், கரண் ஜோஹரின் பல கேள்விகளுக்கும் அமீர் கான் பதிலளித்துள்ளார். அப்போது முன்னாள் மனைவிகளான ரீனா துத்தா, கிரண் ராவ் குறித்து கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அமீர்கான். "எனக்கு ரீனா துத்தா, கிரண் ராவ் இருவர் மீதும் ரொம்பவே மரியாதை உள்ளது. பிரிந்துவிட்டாலும் நாங்கள் அடிக்கடி நண்பர்களாக பேசிக்கொள்வோம். வாரம் ஒருமுறை கூட நேரில் பார்த்துக்கொள்வது உண்டு" என ஓப்பனாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











