யாரோட நடிக்க ஆசை... தீபிகா படுகோன் யாரை கைக்காட்டியிருக்காங்க பாருங்க
மும்பை : நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் இவரது மார்க்கெட் அப்படியே தான் இருக்கிறது.
தற்போது இவரது நடிப்பில் கெஹ்ரையான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட்டின் சிறப்பான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் தீபிகா படுகோன். இவருக்கு திருமணமான நிலையிலும் தனது முன்னணி நடிகை அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருகிறார்.

கெஹ்ரையான் படம்
இவரது நடிப்பில் கடந்த 11ம் தேதி கெஹ்ரையான் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரைலரிலேயே முத்தக் காட்சிகள் இடம்பெற்று பரபரப்பை கிளப்பியது. படத்தில் சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோன் இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

தீபிகா நடிப்பிற்கு பாராட்டு
தங்கையுடன் நிச்சயம் செய்யப்பட்டவருடன் தீபிகாவிற்கு ஏற்படும் காதலை மையமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது. படத்தில் தீபிகாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே படத்தின் பிரமோஷனில் தீபிகா தெரிவித்த கருத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர ஆசை
அவரிடம் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க விருப்பம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். நம்ப முடியாத ஆளுமையுடன் அவர் இருப்பதாகவும் தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார்.

இந்தியில் ஹிட்டடித்த புஷ்பா
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்தியிலும் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அவருக்கு இந்தியில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

தீபிகாவின் அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே, தீபிகா படுகோன் நடிப்பில் தற்போது கெஹ்ரையான் படம் ரிலீசாகியுள்ள நிலையில் அடுத்ததாக ஹிரித்திக் ரோஷனுடன் பைட்டர், ஷாருக்கானுடன் பதான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.

கங்கனா ரணாவத் காட்டம்
கெஹ்ரையான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத், படத்தை குப்பைப்படம் என்று விமர்சனம் செய்துள்ளார். பிரபலம் மற்றும் புதிய நாகரீகம் என்ற பெயரில் இதுபோன்ற குப்பைக் கதைகளை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











