முதலில் கர்ப்பம்; பிறகுதான் திருமணம் - கியாரா அத்வானியின் திருமணத்தில் புது சர்ச்சை

மும்பை: பாலிவுட்டில் விமர்சகர் என கூறிக்கொள்ளும் KRK என்பவர் கியாரா அத்வானியின் திருமணம் குறித்து செய்திருக்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்தவர் கியாரா அத்வானி. அந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார். அப்படி பிரபலமான கையோடு தெலுங்கிலும் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்..

நடிகருடன் நெருக்கமான கியாரா அத்வானி

நடிகருடன் நெருக்கமான கியாரா அத்வானி

இந்தச் சூழலில் ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடித்த கியாரா அத்வானிக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்தார். அப்போதிலிருந்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

 கியாரா அத்வானிக்கு மலர்ந்த காதல்

கியாரா அத்வானிக்கு மலர்ந்த காதல்

இந்தப் படத்துக்கு பின்னர் தமிழ் இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெர்ஷா படத்தில் இருவரும் கமிட்டாகினர். இந்தப் படத்தில் நடித்தபோது ஏற்கனவே இருவருக்கும் இருந்த நெருக்கம் காதலாக மாறியது.தொடர்ந்து ஜோடியாக பல இடங்களில் தென்பட்ட இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று பாலிவுட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் கியாரா அத்வானிக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் பெரிதாக யாருக்கும் அழைப்பு இல்லை. குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு சென்றது. திரையுலகிலிருந்து கரண் ஜோஹர், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர்.

 தாலி முதல் உணவு வரை

தாலி முதல் உணவு வரை

கியாரா அத்வானியின் திருமணத்தில் ஹைலைட்டே அவர் அணிந்திருந்த தாலிதான். அந்தத் தாலியை பிரபல டிசைனர் சப்யாசாஷி முகர்ஜி டிசைன் செய்திருந்தார். அந்த தாலியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பொதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது திருமணத்தில் இத்தாலி, சீனா, அமெரிக்கா, மெக்சிகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்பட்டதாக கூறப்பட்டது.

கியாரா திருமணத்தில் புதிய சர்ச்சை

கியாரா திருமணத்தில் புதிய சர்ச்சை

இந்நிலையில் கியாரா அத்வானியின் திருமணம் குறித்து புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. KRK என்ற விமர்சகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் கர்ப்பமாகிவிட்டு அதன் பிறகு திருமணம் செய்துகொள்வதுதான் பாலிவுட்டின் புது ட்ரெண்ட். பாலிவுட்டில் சமீபத்தில் நடந்த திருமணம்கூட இதே ஃபார்முலாவை பின்பற்றி நடந்ததுதான்" என குறிப்பிட்டுள்ளார். கியாராவின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தாலும் சமீபத்தில் நடந்த திருமணம் கியாராவுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட திருமண ப்ரோமோ வீடியோ

இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட திருமண ப்ரோமோ வீடியோ

முன்னதாக, கியாரா அத்வானி தனது திருமணத்தின் ப்ரோமோ வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அவர்களது திருமணத்தின் முழு வீடியோ ஏதேனும் ஒரு ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X