பாலிவுட் இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்.. தாதா சாகேப் பால்கே விருதுக்கு சொந்தக்காரர்!
மும்பை: சர்வதேச அளவில் புகழப்படும் பாலிவுட் இயக்குநர் ஷியாம் பெனகல் மும்பையில் இன்று மாலை 6.30 மணியளவில் காலமானார். அங்கூர், நிஷாந்த், மன்தன், பூமிகா உள்ளிட்ட படங்களை இயக்கியதன்மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரிய இயக்குநராக அறியப்பட்ட ஷியாம் பெனகல் தன்னுடைய 90வது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஷியாம் பெனகல், இன்று மாலை காலமானதாக அவரது மகள் பியா பெனகல் உறுதி செய்துள்ளார். மும்பையின் Wockhardt மருத்துவமனையில் சிகிச்சை கடந்த சில மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1974ம் ஆண்டில் ஆங்கூர் படம் மூலம் இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

ஷியாம் பெனகல் காலமானார்: இதனிடையே மும்பையின் Wockhardt மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஷியாம் பெனகல் சிகிச்சை பலனின்றியும் வயது மூப்பு காரணமாகவும் உயிரிழந்தார். கடந்த 1974ம் ஆண்டில் ஆங்கூர் என்ற படம் மூலம் இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை ஷியாம் பெனகல் கட்டிப் போட்டார். ஆங்கூர், பூமிகா உள்ளிட்ட 18 படங்களுக்கு இவர் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளுடன் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்: தன்னுடைய மூன்றாவது படமான நிஷாந்த் படத்தின்மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருந்தார் ஷியாம் பெனகல். இந்தப் படம் கடந்த 1976ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. கிரிஷ் கர்னாட், சபனா ஆஸ்மி, அனந்த் நாக், அம்ரிஷ் பூரி, ஸ்மிதா படேல், நஸ்ருதீன் ஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்தது. கடந்த டிசம்பர் 14ம் தேதிதான் இவர் தன்னுடைய 90வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்நிலையில் தற்போது இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் சேகர் கபூர் வருத்தம்: தன்னுடைய சிறப்பான கதைக்களம் மற்றும் ஸ்கிரிப்ட் வொர்க்கால் தொடர்ந்து ரசிகர்களுக்கு அழுத்தமான படங்களை கொடுத்துவந்த ஷியாம் பெனகல், சாகும்வரை சினிமாவிற்காக இயங்கிக் கொண்டிருந்தார். அந்த அளவிற்கு சினிமா மீதான அவரது காதல் இருந்தது. இந்நிலையில் ஷியாம் பெனகல் மறைவிற்கு பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சேகர் கபூர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஷியாம் பெனகல் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











