குழந்தை பிறந்தபின்பு ஜோடியாக வந்த தீபிகா படுகோன் -ரன்வீர் சிங்.. தீபிகா வாட்ச் மட்டும் இத்தனை லட்சமா
மும்பை: நடிகை தீபிகா படுகோன் -ரன்வீர் சிங் தம்பதிக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டில்தான் மகள் பிறந்துள்ளார். முன்னதாக கர்ப்பகால போட்டோஷுட் நடித்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் தீபிகா படுகோன். இதனிடையே கல்கி 2898 ஏடி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று கவனத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மும்பையின் பிரபலமான இடத்தில் புதிய வீட்டை வாங்கி அங்கே அமைதியான சூழலில் தன்னுடைய பெண் வளர வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார். சமூக நிகழ்வுகளிலும் குரல் கொடுத்துவரும் தீபிகா, கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்&டி நிறுவனத் தலைவரின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருந்தார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் அடுத்தடுத்து ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் இணைந்து நடித்திருந்த பதான், ஜவான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தன. மேலும் கல்கி 2898 ஏடி படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் 1000 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்திருந்தது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார் தீபிகா படுகோன். பல ஆண்டுகள் கழிந்து கடந்த ஆண்டில்தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.
ரன்வீர் சிங் -தீபிகா படுகோன் ஜோடி: இந்தக் குழந்தைக்காக புதிய வீட்டை வாங்கியிருந்த தீபிகா படுகோன், தன்னுடைய மகளுக்கு அமைதியான சூழலை கொடுக்க விரும்பியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் குழந்தை துவா பிறந்து சில மாதங்கள் கழித்து தற்போது ரன்வீர் சிங் -தீபிகா படுகோன் ஜோடி வெளியில் தலைகாட்ட துவங்கியுள்ளது. எப்போதுமே பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக கொண்டாடப்படும் இந்த ஜோடி மும்பை விமானநிலையத்திற்கு வந்திருந்தது. அப்போது இவர்களின் கெட்டப் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக தீபிகா படுகோனின் வாட்ச் ஏராளமான ரசிகர்களை கவர்வதாக அமைந்தது.
தீபிகா அணிந்திருந்த காஸ்ட்லி வாட்ச்: Santos de Cartier வாட்சை தீபிகா படுகோன் அணிந்திருந்தார். அவரது கூலர்ஸ், உடை ஆகியவற்றிற்கு சிறப்பாக பொருந்தும்வகையில் இந்த வாட்ச் அமைந்திருந்தது. இந்த வாட்சின் விலை மட்டும் 30 லட்சத்து 80 ஆயிரம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாட்சின் கேஸ் 18 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டள்ளது. டயல் சில்வர் நிறத்தில் கண்ணை பறிப்பதாக காணப்பட்டது. இதனிடையே தீபிகா அணிந்திருந்த ஷர்ட்டின் விலையும் கொஞ்ச நஞ்சமல்ல. 79.100 மதிப்பிலான இந்த ஷர்ட்டிற்கு பொருத்தமாக 39,000 மதிப்பிலான ஜீன்சை தீபிகா அணிந்திருந்தார். அவரது கூலர்சும் இந்த உடைக்கு பொருத்தமாக அமைந்திருந்தது.
பொருத்தமான ஜோடி: இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தீபிகாவின் சிரிப்பு அவரது உடைக்கும் அவருக்கும் மேலும் மெருகூட்டுவதாக காணப்பட்டது. ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனுக்கு பொருத்தமான உடையுடன் காணப்பட்டார். கருப்பு நிறத்தில் அவரது உடை காணப்பட்ட நிலையில், இருவரும் பொருந்தமான ஜோடி என்பதை மீண்டும் நிரூபிக்கும்வகையில் அமைந்திருந்தனர். இருவரும் குழந்தையை உடன் அழைத்து வரவில்லை. நம்ம ஊர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடியிடம்தான் குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் வித்தையை இவர்கள் கற்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்ததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











