ச்சீ..ச்சீ.. பப்பி ஷேமாக இருக்காது? லாட்ஜில் இவ்வளவு பெரிய கண்ணாடியா? எட்டிப் பார்ப்பது யாரு தெரியுமா
ஆஸ்திரேலியா: பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தனது காதலர் ஜாகீர் இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வட மாநிலங்களில் எழுந்தது. குறிப்பாக, சோனாக்ஷி சின்ஹா ஒரு இந்து, இவர் எப்படி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வி பலரை விவாதிக்க வைத்தது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காதலரை கரம் பிடித்தார் சோனாக்ஷி சின்ஹா.
பிரபலங்களைப் பொறுத்தவரையில் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு, காதலர் தினம் என இதுபோன்ற முக்கியமான நாட்கள் வரும்போது, வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தனது காதல் கணவர் ஜாகீர் இக்பாலுடன் நடிகை சோனாக்ஷி சின்ஹா இந்த புத்தாண்டை வரவேற்கச் சென்றுள்ள நாடு ஆஸ்திரேலியா. அதுவும், ஆஸ்திரேலியாவில் உள்ள மிகவும் பிரபலமான ஜமலா வைல்ட் லைஃப் லாட்ஜில் கொண்டாடியுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா என பெயர் வைத்ததுதான் வைத்தார்கள், காதல் கணவரை அழைத்துக் கொண்டு சிங்கங்கள் சூழ்ந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த லாட்ஜினைப் பொறுத்தவரையில் அங்கு ரூம் புக் செய்பவர்களுக்கு ஒரு பெரிய அறையைக் கொடுத்துவிடுவார்கள். அறையின் சுவர்களுக்கு பதிலாக மிகவும் தடிமனான மற்றும், விலங்குகளால் உடைக்க முடியாத கண்ணாடி இருக்கும். அறைக்குள் இருந்து கொண்டே, அங்குள்ள காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை ஆகிவற்றைப் பார்த்து ரசிக்கலாம். இந்த லாட்ஜில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் பல லட்சங்கள் என கூறப்படுகின்றது. இந்த லாட்ஜ் ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வைல்ட் லைஃப் லாட்ஜாக உள்ளது.
புத்தாண்டு: ஆனால் காதல் கணவருடன் புத்தாண்டை வரவேற்க சோனாக்ஷி சின்ஹாவுக்கு வேறு இடமே இந்த உலகத்தில் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு மிகவும் த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுக்கும், லார்ட்ஜ்க்காக போகவேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றார்கள். இந்த லாட்ஜுக்கு போனது மட்டும் இல்லாமல், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும் இவர்கள் நேரில் சென்று பார்த்துள்ள்னர்.

கமெண்ட்: இது தொடர்பாக சோனாக்ஷியும் அவரது கணவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு லாட்ஜிலா புத்தாண்டை வரவேற்பார்கள்? அதுவும் காதல் கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள சோனாக்ஷி கணவருடன் ரொமாண்டிக்காக இருப்பதை விட்டுவிட்டு, செம ரொமான்ஸ் மூடில் இருக்கும்போது சிங்கம், சிறுத்தை எட்டிப் பார்க்கும் லாட்ஜ்க்கா செல்லவேண்டும் என தொடர்ந்து கமெண்ட்டில் கேட்டு வருகின்றார்கள்.

குட்டி சோனக்ஷி: மேலும் அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அறைக்குள் சோனாக்ஷியும் அவரது கணவரும் ரொமான்ஸில் இருக்க, அறைக்கு வெளியே, ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்த்த இணையவாசிகள், சீக்கிரமே குட்டி சிங்கமும், குட்டி சோனாக்ஷியும் பிறந்துவிடுவாங்கபோல, வாழ்த்துகள் என ஜாலியாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











