‘அன்பான விருந்தோம்பல்… மறக்கமுடியாத சுவை… பிரபாசை பாராட்டிய பாலிவுட் பிரபலம் !
மும்பை : உங்களின் அன்பான விருந்தோம்பலை என்றுமே மறக்க முடியாது என பாலிவுட் பிரபல நடிகர் பிரபாசை பாராட்டி உள்ளார்.

பாலிவுட்டின் தனிப் பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஹிந்திப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். முதல் முறையாக தென்னிந்தியாவில் தெலுங்கில் சிரஞ்சிவி நடித்து வெளிவந்த 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதற்கடுத்து தமிழில் எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அந்தப் படம் பிரச்சினையில் சிக்கியது.
அமிதாப் அடுத்து நடிக்கும் தெலுங்கு, ஹிந்திப் படமாக 'பிராஜக்ட் கே' அமைந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோருடன் அமிதாப்பும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள, சயின்ஸ் பிக் ஷன் கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபாஸ், சாதனையாளர் அமிதாப் சாருடன் முதல் நாள் படப்பிடிப்பை முடித்துள்ளேன். அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டதாக பிரபாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபாஸின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளார். பாகுபலி பிரபாஸ், உங்கள் பெருந்தன்மைக்கு அளவே இல்லை. எனக்கு வீட்டில் சமைத்த, சுவையான உணவுகளைக் கொண்டு வருகிறீர்கள். எனக்குத் தேவையான அளவைத் தாண்டி அனுப்புகிறீர்கள். அதைக் கொண்டு ஒரு ராணுவத்துக்கே உணவளித்திருக்கலாம். உங்களின் அன்புக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ஒரு நாள் முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாக உள்ளது. இதன்மூலம் இந்த இரண்டு படங்களுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் படமும், பிரபாஸின் படமும் முதன்முறையாக மோத உள்ளன.


Click it and Unblock the Notifications











