அஜய்தேவ்கான் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி... பியர் கிரில்சுடன் ஒரு த்ரில் பயணம் !

மும்பை : பிரபல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர் தேவ் கான் பங்கேற்றுள்ளார்.

உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌ அஜய் தேவ் கானுடன் இணைந்து ‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில்‌ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட்‌ நடிகைகள்‌ ஜூலியா ராபர்ட்ஸ்‌, கேட்‌ வின்ஸ்லெட்‌ ,டென்னிஸ்‌ வீரர்‌ ரோஜர்‌ பெடரர்‌ , மற்றும்‌ சென்ற வருடம்‌ இந்திய பிரதமர்‌ நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்‌ பங்கேற்றுள்ளனர்‌.

அஜய் தேவ்கான்

அஜய் தேவ்கான்

1991ம் ஆண்டு வெளியான Phool Aur Kaante என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் நுழைந்தார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து Jigar,Divya Shakti,Platform,Sangraam போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

கஜோலை மணந்தார்

கஜோலை மணந்தார்

பாலிவுட்டில் முன்னணி நடிகர் என பெயர் எடுத்த அஜய்தேவ் கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் தேதி கஜோலைத் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ஒருமகள் உள்ளார். அஜய் தேவ்கான் சாக்ம் மற்றும் தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

ஏராளமான படங்களில்

ஏராளமான படங்களில்

ஏராளமான திரைப்படங்களுடன் பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் அஜய் தேவ்கான் Sooryavanshi, Gangubai Kathiawadi,RRR, Thank God, Maidaan, Mayday போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில்

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில்

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பங்கேற்றார்.

இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி

அதேபோல, இந்தியப் பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரல்ஸ் மோடியிடம் பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்பினார்.

ரஜினிகாந்துடன்

ரஜினிகாந்துடன்

அதேபோல, நடிகர் ரஜினிகாந்தும் ஆபத்துக்கள் நிறைந்த வனப்பகுதியில் இயற்கையோடு ஒட்டி வாழும் முறையை உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X