Amitabh Bachchan: பூ விற்கும் சிறுமி…பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் நெகிழ்ச்சியான ட்வீட்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன்.

திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

Bollywood star amitabh bachchan twitter post about rose selling girl

பாலிவுட் ஸ்டார்: அமிதாப் பச்சன் இந்த வயதிலும் துடிப்புடனும், இளமையுடனே காணப்படுகிறார். பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார். தற்போதும் ஏராளமான விளம்பரங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.

பூ விற்கும் சிறுமி: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடைமழையில் பாதி நனைந்தபடி கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு காரின் கண்ணாடி அருகே சென்று செல்கிறாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது பசியையும், தனது குடும்பத்தின் பசியையும் ஆற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மழை நனைத்த அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது.

ஒரு கணம் அவள் தயங்கினாள்: மழையில் நனைந்து வெளிறியிருந்த அந்த முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அவளை அழைத்தேன். எனக்கு பின்னால் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் அவளை எச்சரித்ததைப் பார்த்து ஒரு கணம் அவள் தயங்கினாள். எனினும் நான் அவளை அழைப்பதை கவனித்து காரின் ஜன்னல் அருகே வந்தாள்.

நெகிழ்ச்சிப்பதிவு: என் ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி, சோகமே உருவான அந்த முகத்தைக் பார்த்தேன். அவளிடம் ரோஜாக்களின் விலையை நான் கேட்கவில்லை. சில ரூபாய் நோட்டுகளை அவளிடம் கொடுத்தேன். அதில் எவ்வளவு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அது அவசியமும் இல்லை. தயக்கத்துடன் பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த சிறுமி, அதே தயக்கத்துடன் என்னிடம் பூங்கொத்தை கொடுத்தாள். நான் பேரம் பேசுவேன் என்று அவள் நினைத்திருக்கலாம். நான் சிரித்த முகத்துடன் போ போ என்றேன். மிகவும் நெகிழ்ச்சியான பதிவினை அமிதாப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X