நான் நல்ல கணவனா? முதல் திருமணநாளில் மனைவியிடம் கேள்வி கேட்ட ரன்பீர் கபூர்!

மும்பை : நான் நல்ல கணவனா? முதல் திருமணநாளில் மனைவி ஆலியா பட்டிடம் ரன்பீர் கபூர் கேள்வி கேட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

bollywood Star couples ranbir kapoor and alia bhatt celebrating first anniversary

2018ம் ஆண்டு முதல் க்யூட் ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த ஆண்டு

ஏப்ரல் மாதம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ரன்பீர் கபூர்-ஆலியா பட் : திருமணத்திற்கு பிறகும் ஆலியா பட் பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர். நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை ஆலியாபட்,ரன்பீர் கபூர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

நல்ல கணவனா : இந்நிலையில், ரன்பீர் கபூர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு நல்ல மகனா.. நல்ல கணவனா.. நல்ல சகோதரனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி இருக்க முயற்சி செய்கிறேன். இதனால், நான் எப்போதும் சரியான பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன். எப்போதும் என் குடும்பத்தின் மீது அதிக அளவில் பாசம் ஈடுபாடு வைத்து இருக்கிறேன்.

bollywood Star couples ranbir kapoor and alia bhatt celebrating first anniversary

மரியாதை அதிகரித்துள்ளது : என்னுடைய கடின காலங்களில் என் குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருந்து ஆறுதல் அளித்து என்னை தேற்றினார்கள். நான் அப்பாவான பின் என் பெற்றோர் மீதான மரியாதை பல மடங்கு அதிகரித்துள்ளது. என் பெற்றோர்கள் என்னை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த நல்ல பண்புகளை, என் மகள் ராஹாவுக்கும் கற்றுக் கொடுப்பேன். அவளை நல்ல பண்பு கொண்ட பெண்ணாக வளர்ப்பேன் என்றார்.

bollywood Star couples ranbir kapoor and alia bhatt celebrating first anniversary

சிறந்த தாய் : மேலும், ஆலியா சிறந்த மனைவியா அல்லது தாயா என்று ரன்பீர் கபூரிடம் கேட்டபோது, அவள் மனைவியை விட சிறந்த அம்மாவாக இருக்கிறாள். குழந்தைக்கு உணவளிப்பது ஒருவிதமான கலை அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X