மும்பையில் பிரம்மாண்ட ஓட்டல் கட்டும் சல்மான் கான்… யார் பெயரில் தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் பிரம்மாண்டமான ஓட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக நடித்து வருபவர் சல்மான் கான்.

இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Bollywood star Salman Khan to construct a 19 storey hotel at mumbai

சல்மான் கான் : 56 வயதாகும் சல்மான் கான் 1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வரும் சல்மான் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

காதல் மன்னன் : Hum Dil De Chuke Sanam திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். ஆனால், ஐஸ்வர்யா தந்தைக்கும் சல்மான் கானுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். அதே போல கத்ரீனா கைஃப்பையும் சல்மான் காதலித்தார். ஒரு படப்பிடிப்பில் சல்மான் கத்ரீனாவை அடித்ததால் இவர்கள் காதல் முறிந்தது. சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கிசுகிசு எழுந்தது.

Bollywood star Salman Khan to construct a 19 storey hotel at mumbai

முரட்டு சிங்கிள் : அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கும் சல்மான் கானுக்கு பல நடிகைகளுடன் காதல் ஏற்பட்ட போதும், கல்யாண ராசி இல்லாததால் தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருக்கு எப்போது கல்யாணம் என கேட்டு கேட்டே இவரது ரசிகர்கள் அலுத்துப்போனார்கள்.

பிரம்மாண்ட ஓட்டல் : இந்நிலையில், நடிகர் சல்மான் கான் மும்பையில் கடற்கரை பாந்த்ரா பகுதியில் பிரம்மாண்ட ஓட்டல் ஒன்றை கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 19 மாடிகளுடன் இந்த ஓட்டலில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டலை சல்மான்கான் தனது அம்மா சல்மாவின் பெயரில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பக்கா பிளான் : ஓட்டலின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் கஃபே மற்றும் உணவகமும், மூன்றாவது மாடியில் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளமும், நான்காவது தளம் சர்வீஸ் தளமாகவும், ஐந்தாவது மற்றும் ஆறாவது மாடியில் கான்பிரன்ஸ் ஹாலும், 7 மற்றும் 19வது தளங்களில் அறைகள் அழகாக கட்டமைப்பு பிளான் போட்டுள்ளார். இந்த ஓட்டலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமீர் கானின் வீடு அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X