Jawan : ஷாருக்கானின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. ஜவான் படத்தின் தரமான அப்டேட்!
சென்னை : ஷாருக்கானின் ஜவான் படம் குறித்த அதிரடியான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் அட்லி விஜய்யின் பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் தனது தடத்தைப்பதிக்க விரும்பினார்.

அட்லி சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடித்துப்போக இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், தனது மனைவியுடன் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார்.
ஷாருக்கான் ஜவான் : ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களின் பார்வை ஜவான் படத்தின் மீது உள்ளது. இப்படத்தில் ஷாருக், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு ஆகியோருடன் விஜய் சேதுதிபதியும் நடித்துள்ளர். இந்தியில் மேர்ரி கிறிஸ்துமஸ், மும்பைக்கர் என இரண்டு படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
டபுள் ஆக்ஷன் : ஜவான் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா, இதில் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த பாடல் : இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து பாடல் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இது ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொகுசு கப்பலில் படமாக்கப்பட்ட இந்த டூயட் பாடலில், நயன்தாராவும், ஷாருக்கானும் நடனமாடும் காட்சி இடம் பெற்று இருந்தது.
அதிரடி அறிவிப்பு : இந்நிலையில் ஜவான் படத்தின் அதிரடியான க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான் பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி மே முதல் வாரத்தில் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











