சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த ஷாருக்கான்.. அவருக்கு என்ன பிரச்சனை தெரியுமா?

மும்பை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் ஐபிஎல் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த போது, ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது ஷாருக்கான் மற்றொரு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக்கான் நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். ஆனால், அந்த மருத்துவமனையில் திட்டமிட்டபடி கண் சிகிச்சை நடக்காததால், ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிற எந்த விவரமும் தெரியவில்லை.

Shahrukh Khan America treatment

அமெரிக்கா சென்றார்: ஆனால், இந்தி பத்திரிக்கை ஒன்றில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பே ஷாருக்கானுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில், கண்புரைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கண்ணுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. கண் சிகிச்சை செய்த போதும், அவரது கண்களில் சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்ததால், அதற்காக ஷாருக்கான் தற்போது அமெரிக்கா சென்று இருப்பதாகவும் விரைவில் அவர் சிகிச்சை முடிந்து திரும்புவார் என்றும் அந்த பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜவான்: பாலிவுட் பாட்சா ஷாருக்கானின் நடிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் 2018 ஆம் ஆண்டு ஜீரோ திரைப்படம் வெளியானது. பெரும் வசூலை இத்திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து கடந்த ஆண்டு பதான் திரைப்படத்தின் மூலம் மாஸ் காட்டினார் ஷாருக்கான். இதைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூலாகி கஜானாவை நிரப்பியது.

ஷாருக்கானின் கிங்: தற்போது ஷாருக்கான் கிங் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சுஜோய் கோஷ் இயக்க, ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாகவும் நடித்துள்ளார், தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் சார்ட்பஸ்டர் இசையை வழங்கிய அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X