போட்டோஷூட்டின் போது நடிகைக்கு முத்தம்..பொது இடத்தில் மோசமாக நடந்து கொண்ட நடிகர்!
மும்பை: பாலிவுட்டில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை கியாரா அத்வானி. இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பொது இடம் என்று கூட பார்க்காமல் பாலிவுட் நடிகர் ஒருவர் நச்சுனு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாலிவுட் நடிகரான வருண் தவான் பிரபல இயக்குனர் டேவிட் தவான் மற்றும் அவரது அன்பு மனைவி கருணா தவான் ஆகியோரின் இளைய மகன் ஆவார். இந்தி தொடர் ஒன்றில் உதவி இயக்குநராக சினிமாவிற்கு வந்த வருண் தவான். ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக மாறினார். அதன்பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய இவர், ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், மெயின் தேரா ஹீரோ, பத்லாபூர், தில்வாலே, டிஷ்யூம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வருண் தவான்: தற்போது, இவர் அட்லீ இயக்கத்தில் உருவான தெறி இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தி ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது.
அந்த இடத்தில் முத்தம்: பாலிவுட்டின் பிஸியான நடிகரான வருண் தவான், காஸ்மோபாலிட்டன் இந்தியாவின் அட்டைப்படத்திற்காக கியாரா அத்வானியுடன் போட்டோஷூட் செய்துகொண்டிருந்த போது, திடீரென தன்னை மறந்த வருண் தவான், கியாரா அத்வானிக்கு முத்தம் கொடுத்துவிட்டார். அவர் திடீரென முத்தம் கொடுத்ததால், பதறிப்போன கியாரா என்ன என்று கேட்டுவிட்டு அப்படியே சமாளித்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அடுத்தவரின் மனைவிக்கு இப்படியா முத்தம் கொடுப்பது என்று கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் மனைவியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுக்கொடுத்தது. அதன் பின் தெலுங்கில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக பரத் எனும் நான் என்ற படத்தில் நடித்த கியாரா, இந்தி, தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக மாறினார்.
காதல் திருமணம்: இதையடுத்து,நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த தொடரில் இவர் வைப்ரேட்டர் பயன்படுத்தும் சீன் இன்றளவும் இணையத்தில் செம டிரெண்டிங்கில் உள்ளது. படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர், ஷெர்ஷா படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் கியாரா அத்வானி தொடர்ந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











