மிரட்டத் தயாராகும் பாலிவுட் விக்ரம் -வேதா.. பொன்னியின் செல்வனோட மோத தயார்!
மும்பை : நடிகர் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து மிரட்டிய படம் விக்ரம் வேதா. புஷ்கர் -காயத்ரி இணைந்து இந்தப் படத்தைக் கொடுத்திருந்தனர்.
மிரட்டலான திரைக்கதையுடன் வெளியான இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனங்களும் வசூலும் கிடைத்தன.
தற்போது இந்தப் படம் இந்தியில் புஷ்கர் -காயத்ரி இயக்கத்திலேயே உருவாகயுள்ளது. படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகான் நடித்துள்ளனர்.

விக்ரம் வேதா படம்
நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பில் கடந்த 2017ல் வெளியான படம் விக்ரம் வேதா. இந்தப் படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை மிரட்டியது. மாதவன், விஜய் சேதுபதி இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தனர். இருவருக்குள்ளும் சிறப்பான போட்டி காணப்பட்டது.

புஷ்கர் -காயத்ரி இயக்கம்
மாதவன் விக்ரமாகவும் விஜய் சேதுபதி வேதாவாகவும் நடித்திருந்த இந்தப் படத்தை புஷ்கர் -காயத்ரி இயக்கியிருந்தனர். இவர்களது அக்மார்க் படமாக இந்தப் படம் வெளியானது. தற்போது இவர்கள் புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி அதன்மூலம் சுழல் என்ற வெப் தொடரை உருவாக்கி அமேசான் பிரைமில் வெளியிட உள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

பாலிவுட்டில் விக்ரம் வேதா
இந்நிலையில் விக்ரம் வேதா படத்தை பாலிவுட்டிலும் புஷ்கர் காயத்ரி படமாக்கியுள்ளனர். ஹ்ரித்திக் ரோஷன், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் வேதாவாகவும் சயிப் அலிகான் விக்ரமாகவும் நடித்துள்ளனர். படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ட்ரெயிலர்
படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கப்பட்டு, ரிலீசுக்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். விரைவில் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவையொட்டி புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எவர்கிரீன் படம்
ஒரு காவல் அதிகாரிக்கும் கேங்ஸ்டருக்கும் இடையிலான நிகழ்வுகளை சுவாரஸ்யம் கலந்து தமிழில் வெளியான விக்ரம் வேதா படம் கொடுத்தது. தமிழின் எவர்கிரீன் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. சிறப்பான த்ரில் அனுபவத்தை இந்தப் படம் கொடுத்த நிலையில் இந்தியிலும் ரசிகர்களுக்கு இதே உணர்வை, அனுபவத்தை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











