twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் டிரெண்டாகும் BoycottbollywoodForever.. அப்போ அமீர்கான் படம் அவ்வளவு தானா?

    |

    மும்பை: தொடர்ந்து பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணித்து வருவது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸிலேயே பளிச்சென தெரிகிறது.

    தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு இந்தி பெல்ட்டில் செய்த வசூல் சாதனையை இதுவரை வெளியான எந்த அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் படங்களும் முறியடிக்கவில்லை.

    கடைசியாக வெளியான அமீர்கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் மண்ணைக் கவ்விய நிலையில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள லால் சிங் சத்தா படத்திற்கும் கருப்புக் கொடி காட்ட ஆரம்பித்துள்ளனர் பாலிவுட் ரசிகர்கள்.

    அமீர்கான் படத்துக்கு ஆப்பு

    அமீர்கான் படத்துக்கு ஆப்பு

    பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போடிஸம், போதைப் பொருள் சர்ச்சை மற்றும் ரீமேக் படங்களால் ரசிகர்கள் ரொம்பவே பாலிவுட் நடிகர்கள் மீது கடுப்பாகி உள்ளனர். தென்னிந்திய படங்கள் பல பாலிவுட்டில் ரீமேக் ஆகி வரும் நிலையில், அமீர்கானின் லால் சிங் சத்தா பிரபல ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கான் மற்றும் கரீனா கபூர் மீது ஏற்கனவே வெறுப்பில் இருக்கும் பாலிவுட் ரசிகர்கள் லால் சிங் சத்தா படத்தை புறக்கணிப்போம் என தற்போது கோஷம் போட்டு வருகின்றனர்.

    டிரெண்டாகும் பாய்காட் பாலிவுட்

    டிரெண்டாகும் பாய்காட் பாலிவுட்

    விரைவில் பான் இந்திய படமாக வெளியாக உள்ள அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு திடீரென பாலிவுட் ரசிகர்களே இப்படியொரு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தங்கல் படத்தின் மூலம் பாகுபலி வசூலை முறியடித்த அமீர்கானுக்கே இந்த நிலைமையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் அமீர்கான் ரசிகர்கள் தென்னிந்திய சினிமாவை பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க இந்த படத்துக்கு பாலிவுட் ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதுதான் பிரச்சனை

    இதுதான் பிரச்சனை

    பிகே படத்தில் நடிகர் அமீர் கான் இந்துக் கடவுள்களை அவமதித்தார் என அந்த படத்தின் காட்சிகளை பதிவிட்டே இந்த #BoycottbollywoodForever எனும் ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அமீர்கான் மற்றும் கரீனா கபூர் இருவருமே இந்து மதத்தினரை புண்படுத்தியதாகவும், அவர்களது படத்தை புறக்கணிப்போம் என பாலிவுட்டில் மிகப்பெரிய போராட்டமே வெடித்துள்ளது.

    சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டும்

    சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டும்

    பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போடிசம் காரணமாகத்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை பாலிவுட் படங்களை தடை செய்யவும் அதை புறக்கணித்தும் போராடுவோம் என்றும் அவரது ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    இருவரும் என்ன சொன்னாங்க தெரியுமா

    இருவரும் என்ன சொன்னாங்க தெரியுமா

    நெப்போடிசம் பற்றிய கேள்விக்கு ரசிகர்களால் நாங்க ஒன்றும் ஸ்டார் ஆகவில்லை. எங்க படத்தை நீங்க வந்து ஒன்றும் பார்க்க வேண்டாம் என கரீனா கபூர் சொன்னதையும், சிவலிங்கத்திற்கு பால் ஊற்றும் காசை குழந்தைகளுக்கு படிக்க கொடுங்க என அமீர்கான் பேசியதையும் போட்டு, இவர்கள் இருவரது படத்தையும் பார்க்க செலவு செய்யும் காசை அவர்கள் சொன்னதை போலவே குழந்தைகளுக்கு படிக்க செலவு செய்யலாம் என போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    English summary
    Bollywood fans trending #BoycottbollywoodForever and they wants to boycott Aamir Khan's upcoming movie Laal Singh Chaddha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X