twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Brahmastra Box Office: எதிர்ப்புகளை மீறி பாலிவுட்டை மீண்டும் தூக்கி நிறுத்திய பிரம்மாஸ்திரம் வசூல்!

    |

    மும்பை: இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரம் படத்துக்கு பாய்காட் கேங்கிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    410 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் விமர்சகரான தரண் ஆதர்ஷ் 'பெரிய ஏமாற்றம்' என விமர்சனம் அளித்திருந்தார்.

    ஆனால், படத்தை பார்த்த ஏராளமான ரசிகர்கள் மார்வெலுக்கு போட்டியிடும் இந்திய சினிமா என பாராட்ட முதல் நாள் வசூல் வேறலெவலில் கலெக்ட் ஆகி உள்ளது.

    பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்

    அமீர்கான் சாதிக்க முடியாததை

    அமீர்கான் சாதிக்க முடியாததை

    அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கும் இதே போல பாலிவுட் பாய்காட் கேங் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல் நாளில் வெறும் 14 கோடி வசூல் செய்த அந்த படம் 2ம் நாள் வெறும் 7 கோடி அளவுக்கு சரிந்து டிசாஸ்டர் ஆனது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை எந்த பாலிவுட் படமும் செய்யாத வசூல் வேட்டையை பிரம்மாஸ்திரம் நிகழ்த்திக் காட்டி உள்ளது.

    குழப்பும் விமர்சனங்கள்

    குழப்பும் விமர்சனங்கள்

    படம் ரொம்ப சூப்பர் என ஒரு பக்கமும், படம் படு மோசம் என ஒரு பக்கமும் குழப்பும் விமர்சனங்களே சோஷியல் மீடியாவில் ஆட்கொண்ட நிலையில் படத்தை போய் தியேட்டரில் பார்த்து விடுவோம் என ரசிகர்கள் கிளம்பியது தான் முதல் காட்சியை விட மாலை மற்றும் இரவு காட்சிகளில் கூட்டம் அலைமோத காரணம் என்கின்றனர்.

    40 கோடி வசூல்

    40 கோடி வசூல்

    இந்த ஆண்டு வெளியான பல பாலிவுட் படங்களின் லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, மெளனி ராய் நடித்த பிரம்மாஸ்திரம் படம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தி பெல்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த படம். ஒட்டுமொத்த இந்தியளவில் 40 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்.

    கேஜிஎஃப் 2வை விட கம்மி

    கேஜிஎஃப் 2வை விட கம்மி


    பாலிவுட் படங்களின் எழுச்சியாக பார்க்கப்படும் இந்த பிரம்மாஸ்திரம் படம் கூட முதல் நாளில் இந்தி பெல்டில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 படங்கள் செய்த சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரு படங்களும் 50 கோடியை முதல் நாளில் இந்தி பெல்டில் மட்டும் வசூல் செய்தன. உலகளவில் 100 கோடியை கடந்தன.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா

    இயக்குநர் அயன் முகர்ஜியின் பிரம்மாண்ட பிரம்மாஸ்திரம் படம் மற்ற இந்தி படங்களை ஓவர் டேக் செய்து விட்டு இப்படியொரு வசூலை முதல் நாளில் குவித்துள்ள நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    வேட்டை தொடருமா

    வேட்டை தொடருமா

    வெள்ளிக்கிழமை முதல் நாளில் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் காரணமாக இதே வசூல் வேட்டையை தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சுமார் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் அளவுக்காவது வசூல் செய்தால் தான் படம் பெரிய வெற்றி பெற்றதாக கருதப்படும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Brahmastra Box Office: Day 1 collection beats every bollywood movies which releases this year including Aamir Khan's Laal Singh Chaddha. But, it can't able to beat KGF 2 and RRR day one collection at Hindi belt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X