இதயமே வெடிக்கிறது.. பாலிவுட்டில் அடுத்தடுத்த சோகம்.. நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
சென்னை: பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மரணம் பாலிவுட்டில் அடுத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
நேற்று தான் நடிகர் இர்ஃபான் கானின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகக் கடலில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மற்றொரு பிரபல நடிகரான ரிஷி கபூரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மற்றொரு பேரிழப்பாக அமைந்துள்ளது. கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67.
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி கபூரின் மறைவுக்கு பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அக்ஷய் குமார்
நடிகர் இர்ஃபான் கான் இறந்த சோகத்தில் இருந்தே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கு, அடுத்த இடியாக பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மறைவு செய்தி அமைந்திருக்கிறது. இது ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா? என நடிகர் அக்ஷய் குமார் ரிஷி கபூரின் மறைவு செய்தி குறித்துக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த நடிகரான ரிஷி கபூரை இழந்திருக்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

தமன்னா
நம்பவே முடியல.. காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு வருத்தமளிக்கக் கூடிய செய்தியை கேட்க நேர்ந்தது. ரிஷி கபூரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். நாங்க எப்பவுமே உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் ஜி என நடிகை தமன்னா தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டாப்ஸி
ரிஷி கபூர் மறைவுக்கு ஏதாவது எழுத வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், எந்த வார்த்தையும் வராமல் இதயம் இருகிப் போயிருக்கிறது. அவருடைய சிரிப்பு, நகைச்சுவை தன்மை, சிறந்த நடிப்பு என ரிஷி கபூர் என்றுமே அவர் அவராகவே இருப்பார். அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார்.

விக்ரம் பிரபு
இளைய திலகம் பிரபு அப்பாவுக்கும் எனக்கும் மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவரான ரிஷி கபூர் சாரின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. இது மிகவும் மோசமான நாளாக அமைந்திருக்கிறது என நடிகர் விக்ரம் பிரபு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சரத்குமார்
ரிஷி ஜி மரணம் அடைந்த செய்தி ரொம்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது. சினிமா உலகுக்கு அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு. நடிகர் ரிஷி கபூரின் குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல் என நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா
நேற்று இர்ஃபான் கானின் மரணம் இதயத்தை நொறுக்கிய நிலையில், இன்று பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மரண செய்தி மேலும் இதயத்தை கனமாக்கி விட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து போயிருக்கிறேன். நிச்சயம் ரிஷி கபூரின் மரணத் துயரில் இருந்து அவரது குடும்பம் மீண்டு எழும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நடிகை அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி
காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு துயரமான செய்தி கேட்டு எழுவது மிகவும் வேதனை அளிக்கிறது. பல மில்லியன் ரசிகர்களால் போற்றப்பட்டவர் நடிகர் ரிஷி கபூர். அப்படி ஒரு லெஜண்டை சினிமா உலகம் இவ்வளவு சீக்கிரத்தில் இழந்திருக்கக் கூடாது. அவரது தனித்துவமான ஸ்டைல், அறிவாற்றல், சிரிப்பு என அனைத்தும் அப்படியே நினைவில் நிற்கிறது என நடிகை ஷில்பா ஷெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











