நம்ப முடியவில்லை.. இதயமே நொறுங்கிவிட்டது.. இளம் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் பிரபலங்கள்!

சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னரான இளம் நடிகர் சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Bigg Boss 13 Title Winner திடீர் மரணம் | Sidharth Shukla

இந்தி பிக்பாஸ் 13 சீசனின் டைட்டில் வின்னரானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. 40 வயதான சித்தார்த் சுக்லா, சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர், மாடல் என பல முகங்களை கொண்டிருந்தார்.

"ஜலக் திக்லா ஜா 6", "ஃபியர் ஃபேக்டர்: காட்ரோன் கே கிலாடி 7" மற்றும் "பிக் பாஸ் 13" உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் சித்தார்த் சுக்லா பங்கேற்றுள்ளார்.

காலையில் எழவில்லை

காலையில் எழவில்லை

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற சித்தார்த் சுக்லா காலையில் எழுந்திரிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மாவும் சகோதரிகளும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்

பிக்பாஸ் டைட்டில் வின்னர்

கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு சித்தார்த் சுக்லா மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் 13 சீசனில் பங்கேற்ற சித்தார்த் சுக்லாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களையும் பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இல்லை என்று நம்ப முடியவில்லை

இல்லை என்று நம்ப முடியவில்லை

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தனது டிவிட்டர் பக்கத்தில் சித்தாரர்த் சுக்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அவர் இனி இல்லை என்று நம்புவது மிகவும் கடினம். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நண்பரே நீங்கள் மிஸ் பண்ண படுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நம்ப முடியாத பேரதிர்ச்சி

நம்ப முடியாத பேரதிர்ச்சி

இதேபோல் பிரபல பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஷித்தும் சித்தார்த் சுக்லாவின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் இது நம்ப முடியாத பேரதிர்ச்சியாக உள்ளது. நீங்கள் எப்போதும் நினைக்கப்படுவீர்கள் சித்தார்த் சுக்லா.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்களின் குடும்பத்திற்கு என் இதயம்கனிந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் போய்விட்டீர்கள்

சீக்கிரம் போய்விட்டீர்கள்

நடிகை சனம் ஷெட்டியும் சித்தார் சுக்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் முற்றிலும் அதிர்ச்சியான செய்தி.. மிக சீக்கிரம் போய்விட்டீர்கள் சித்தார்த் சுக்லா.. அவருடைய குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவர் உண்மையாகவே எல்லோராலும் விரும்பப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இதயத்தை நொறுக்கும் செய்தி

இதயத்தை நொறுக்கும் செய்தி

இதேபோல் நடிகர் மாதவனும் சித்தார்த் சுக்லாவின் மறைவால் வேதனையடைந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இதயத்தை நொறுக்கும் மற்றும் சோகமான செய்தி. அமைதியாக இருங்கள் சகோதரரே. என் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிரம் போய்விட்டீர்கள் சித்தார்த்

சீக்கிரம் போய்விட்டீர்கள் சித்தார்த்

நடிகை மவுனி ராய்யும் சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ரொம்ப சீக்கிரம் போய்விட்டீர்கள்.. ரிப் சித்தார்த் என்று பதிவிட்டு உடைந்த இதயத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்

அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்

நடிகை அமீஷா பட்டேல் பதிவிட்டுள்ள டிவிட்டில் "மால்கின்" என பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றபோது சித்தார்த் வி சுருக்கமாகத் தெரிந்துகொண்டேன். ஒரு நட்பான, அழகான மற்றும் அன்பான எப்போதும் சிரிக்கும் நபராக அவரைப் பற்றிய இனிமையான நினைவுகளைப் பெறுங்கள்.. அவரது திடீர் மறைவால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். ரெஸ்ட் இன் பீஸ்.. அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

இது அதிர்ச்சிக்கும் அப்பாற்பட்டது

இது அதிர்ச்சிக்கும் அப்பாற்பட்டது

இதேபோல் நடிகர் ஷரத் கெல்கர் பதிவிட்டுள்ள டிவிட்டில்.. முற்றிலும் உணர்ச்சியற்றவனாய் இருக்கிறேன்.. இது அதிர்ச்சிக்கும் அப்பாற்பட்டது.. வாழ்க்கை கணிக்க முடியாதது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.. இவ்வாறு வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X