மரண அடியால்ல இருக்கு.. பாகிஸ்தான் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா ‘சடக் 2’ பாடல்?
மும்பை: ஆலியா பட்டின் புதிய படமான 'சடக் 2' டிரைலர் எப்போ வெளியானதோ.. அதுல இருந்து பாலிவுட் ரசிகர்கள் அதனை வச்சி செய்து வருகின்றனர்.
Recommended Video
உலகளவில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற டிரைலர் என்ற பெயரையே எடுத்துள்ள நிலையில்,
தற்போது அந்த படத்தின் "இஸ்க் கமால்" பாடல் பாகிஸ்தான் பாடலின் காப்பி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

எகிறும் டிஸ்லைக்ஸ்
அரை மில்லியன் லைக்ஸ் கூட வராத நிலையில் ஆறு மில்லியனுக்கும் மேல் டிஸ்லைக்குகளை போட்டு பாலிவுட் ரசிகர்கள் தங்களின் பயங்கர எதிர்ப்பை காரி துப்பாத குறையாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை அவரது தந்தை மகேஷ் பட் இயக்கி உள்ளது தான் இத்தனை வெறுப்புக்கும் காரணம்.

சுஷாந்த் மரண எதிரொலி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் ரியா சக்கரவர்த்திக்கும் இயக்குநர் மகேஷ் பட்டுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களும் சில பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த படத்திற்கு இத்தனை பெரிய எதிர்ப்பு சர்வதேச அளவில் கிளம்பி இருக்கிறது.

பாகிஸ்தான் பாட்டாம்
கடந்த 2011ம் ஆண்டு இசையமைப்பாளர் செஷான் சலீம் உருவாக்கிய பாகிஸ்தானிய பாடலான "ரப்போ ஹோ" பாடலின் காப்பி தான் இது என வெளிப்படையாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், தனது பாடலையும், "இஷ்க் கமால்" பாடலையும் கம்பேர் பண்ணியும் ட்வீட் போட்டுள்ளார். இந்த மாஃபியா கும்பல் எதை வேண்டுமானாலும் செய்யும் என நெட்டிசன்கள் அந்த ட்வீட்டை வைரலாக்கி வருகின்றனர்.

புதியவர்களுக்கு வாய்ப்பு
மகேஷ் பட்டின் குடும்ப படம் என கலாய்க்கப்படும் 'சடக் 2' படத்தின் இசை திருடப்பட்ட ஒன்று என்ற குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், மறைமுகமான ட்வீட் ஒன்றை பூஜா பட் போட்டுள்ளார். சுனில் ஜீத் எனும் சண்டிகரை சேர்ந்த இசை ஆசிரியரின் அருமையான "இஷ்க் கமால்" பாடலை கேட்ட அடுத்த நொடியே தனது தந்தை அவரை படத்தில் சேர்த்து விட்டார்.. புதியவர்களுக்கு எப்போதும் வாய்ப்புத் தருபவர் அவர் என ட்வீட் போட்டுள்ளார்.

ஆலியா பட்டுக்கு ஆதரவாக
STOP TARGETING ALIA BHATT என்ற புது ஹாஷ்டேக்கை உருவாக்கி சில பாலிவுட் பிரபலங்களும் ஆலியா பட்டின் ரசிகர்களும், அவருக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வருகின்றனர். பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களையும் தனது சிறப்பான நடிப்புத் திறமையும் கொடுத்துள்ள ஆலியா பட்டை இப்படி டார்ச்சர் பண்ணக் கூடாது என பதிவுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











