Salman khan: ரொனால்டோவால் சல்மான் அவமதிக்கப்படவில்லை. புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் கூல்!
Salman khan: ரொனால்டோவால் சல்மான் அவமதிக்கப்படவில்லை. புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் கூல்!
ரியாத்: நடிகர் சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

பீவி ஹோ தோ ஐசி படம்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தாலும் மைனே பியார் கியா படம்தான் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவரும் சல்மான் கான் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டைகர் 3 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான்கான்: நடிகர் சல்மான்கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். பாலிவுட்டில் பீவி ஹோ தோ ஐசி படம்தான் இவரது அறிமுகமாக படமாக அமைந்தது. ஆயினும் மைனே பியார் கியா படம்தான் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சல்மான் நடிப்பில் அடுத்ததாக டைகர் 3 படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

டைகர் 3 படம்: இந்தப் படத்தில் கத்ரினா கையிப் ஜோடியாகியுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சல்மான் கான். இதனிடையே சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜியார்ஜினாவும் பங்கேற்றனர்.
குத்துச்சண்டை போட்டி: இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்ற ரொனால்டோ, சல்மான்கானை பார்த்தும் அவருடன் பேசாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு தன்னுடைய மனைவியுடன் சென்றதாக வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சல்மானை ரொனால்டோ அவமதித்ததாக சமூக வலைதளங்களில் சல்மான் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஒருசிலரோ ரொனால்டோவிற்கு சல்மானை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சல்மான் -ரொனால்டோ: இதனிடையே, சல்மான், ரொனால்டோ மற்றும் அவரது மனைவி மூவரும் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்து குத்துச்சண்டையை பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளன. மேலும் சல்மான் மற்றும் ரொனால்டோ இணைந்து பேசி சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ரொனால்டோ தன்னுடைய மனைவியுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டதையும் சல்மான் குத்துச் சண்டையை ஆர்வத்துடன் பார்த்ததையும் மற்றொரு புகைப்படம் வெளிப்படுத்தியது.
எதிர்பார்க்காத சந்திப்பு: இதனிடையே இந்த சந்திப்பு யாரும் எதிர்பார்க்காதது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சல்மானின் டைகர் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 57 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆயினும் இந்த வயதிலும் நீச்சல், நடைப்பயணம், சைக்கிளிங் என அடுத்தடுத்த செயல்பாடுகளை செய்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்து வருகிறார்.
விஷ்ணு வர்தனுடன் இணையும் சல்மான்: தமிழ் பட இயக்குநர்களுடனும் தொடர்ந்து கைக்கோர்த்துவருகிறார் சல்மான் கான். அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் சல்மான் ராணுவ வீரராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அஜித்தின் வீரம் படத்தின் ரீமேக்கிலும் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











