“டேஞ்சரஸ்“ லெஸ்பியன் படத்திற்கு இனி தடையில்லை… ராம்கோபால் வர்மா ட்வீட் !

சென்னை : பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா டேஞ்சரஸ் என்ற சர்ச்சைக்குரிய லெஸ்பியன் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தை திரையிட மாட்டோம் என மில்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அறிவித்ததை அடுத்து படம் வெளியாகவில்லை. தற்போது, படம் வெளியாக இருப்பதாக ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவர். இவருடைய படங்கள் எப்போது வெளியானாலும் அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையை கிளப்பிவிடும்.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்த இவர் சோஷியல் மீடியாவிலும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள்,அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து ஓரமாய் ஒதுங்கிவிடும்.

18+ திரைப்படங்கள்

18+ திரைப்படங்கள்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேக்டு போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளில் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம்சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களே எடுத்து வருகிறார்.

லெஸ்பியன் திரைப்படம்

லெஸ்பியன் திரைப்படம்

ராம்கோபால் வர்மாவின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய படமான 'டேஞ்சரஸ்' . ஏப்ரல் 8 ந் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ப்ரோமோஷன் பணிகள் நடந்தது. டேஞ்சரஸ் இரண்டு பெண்களின் உறவை பற்றிய லெஸ்பியன் படம் என்பதால், இப்படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி திரையரங்கை தரமுன்வரவில்லை. இதனால், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

மே 6ஆம் ரிலீஸ்

மே 6ஆம் ரிலீஸ்

இந்நிலையில், ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ள ட்விட்டரில், டேஞ்சரஸ் திரைப்படம் லெஸ்பியன் கதை அம்சம் கொண்டதால் ஆபாசம் முத்தக்காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் தாமதப்படுத்தினர். ஆனால் இப்போது அந்த சிக்கல்கள் சமாளிக்கப்பட்டு மே 6 ஆம் தேதி இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் படம் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X