கணவருடன் ரகசியமாக ரெஜிஸ்டர் அலுவலகத்துக்கு சென்ற தீபிகா படுகோன்.. என்ன மேட்டர் தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் பதிவுத் துறை அலுவலகத்துக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

ஹூடி போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தபடி நடிகர் ரன்வீர் சிங் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் வெளியே வர அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன் மாஸ்க் அணிந்து அடையாளம் தெரியாமல் இருந்தனர்.

ஆனாலும், சில ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

கணவருடன் ரகசியமாக

கணவருடன் ரகசியமாக

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இருவரும் ரகசியமாக மும்பையின் அலிபாக் எனும் இடத்தில் உள்ள ரெஜிஸ்டர் அலுவலகத்துக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருக்க அவர்கள் நினைத்தாலும், அவர்களை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

என்ன மேட்டர்

என்ன மேட்டர்

திடீரென பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு செல்ல காரணம் என்ன? என வட மாநில மீடியாக்கள் அலசி ஆராய ஏகப்பட்ட ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இணைந்து மும்பை கடற்கரையோரத்தில் கோடிக் கணக்கான மதிப்பில் புதிதாக இடம் ஒன்றை வாங்கி உள்ளார்களாம்.

சொகுசு பங்களா

அந்த இடத்தில் இரண்டு சொகுசு பங்களாக்கள் மற்றும் தென்னந்தோப்பு தோட்டம் போன்ற விஷயங்களையும் வைக்க அவர்கள் தீர்மானித்து இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சமீபத்தில் தான் நடிகை தீபிகா படுகோன் விலையுயர்ந்த ஒரு அப்பார்ட்மென்ட்டை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு

ரியல் எஸ்டேட்டில் முதலீடு

பாலிவுட் நடிகர்கள் அதிகளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் முதல் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வரை சமீபத்தில் தான் புதிய சொத்துக்களை வாங்கிக் குவித்தனர். இந்நிலையில், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இணைந்து கடற்கரை ஓரத்தில் விலையுயர்ந்த இடம் ஒன்றை வாங்கி பதிவு செய்துள்ளனர்.

 பெங்களூருவில் வீடு

பெங்களூருவில் வீடு

பெங்களூருவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார். மும்பையில் ஏற்கனவே பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பெட்ரூம் ஃபிளாட் ஒன்றை வாங்கி தனது கணவர் ரன்வீர் சிங்குடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் பெங்களூருவிலும் விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கி இருந்தார்.

ரன்வீர் சிங் '83'

ரன்வீர் சிங் '83'

இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்ட பலர் நடிப்பில் கபீல் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவான '83' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரொனா பரவல் காரணமாக இன்னமும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் ரன்வீர் சிங்.

அந்நியன் ரீமேக்

அந்நியன் ரீமேக்

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். ராம்சரண் படத்தை இயக்கி முடித்து விட்டு அடுத்ததாக இந்த படத்தை ஷங்கர் இயக்க உள்ளார்.

பிரபாஸ் படத்தில்

பிரபாஸ் படத்தில்

ரன்வீர் சிங் ஒரு பக்கம் இப்படி பிசியாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் மனைவி தீபிகா படுகோன் மகாநடி படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், ஷாருக்கானின் பதான் படத்திலும் தீபிகா படுகோன் தான் ஹீரோயின்.

தீபிகா படுகோன் சொத்து மதிப்பு

தீபிகா படுகோன் சொத்து மதிப்பு

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோன். சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், சுமார் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள தீபிகா படுகோன் தற்போது புதிய படங்களுக்கு சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை வாங்குகிறார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 351 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

307 கோடி

307 கோடி

தீபிகா படுகோன் சொத்து மதிப்பு 351 கோடி என்றால் கணவர் ரன்வீர் சிங்கின் சொத்து மதிப்பு தனியாக 307 கோடி ரூபாய் என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சினிமா படங்கள் மற்றும் விளம்பரங்கள் என ஆண்டுக்கு ரூ. 40 கோடி சம்பாதித்து வருகிறாராம் ரன்வீர் சிங். இப்படி கணவனும் மனைவியும் சுமார் 650 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தால் எத்தனை சொகுசு பங்களாக்கள் வேண்டுமானாலும் வாங்கலாம் என பாலிவுட் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X