Deepika: ரன்வீர் அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறினாரா தீபிகா படுகோன்.. தொடரும் விவாகரத்து சர்ச்சை!
மும்பை: நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். கடந்த 2012ம் ஆண்டில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் அதை மறுக்கவில்லை. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இவர்களின் காதல் தொடர்ந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் இருவரின் திருமணம் இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணமாகி 5 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இருவரும் குழந்தை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதனிடையே தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதைவிட அதிகமாக இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் பிரிவு முடிவை வெளியிடவுள்ளதாகவும் விமர்சகர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். பாலிவுட்டில் மிகவும் அந்நியோன்னியமான தம்பதிகளாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் பத்மாவத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பிரியும் முடிவில் உள்ளதாக பரவிவரும் தகவல்கள் அவர்களது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.

தீபிகா படுகோன் -ரன்வீர் சிங்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள தீபிகா படுகோன் அடுத்தடுத்து ஷாருக்கான், சல்மான்கான் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக அதிகமான ஆண்டுகள் நீடித்துவரும் தீபிகா படுகோன் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இவர் டேட்டிங்கில் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவருமே அதை மறுக்காமல் மௌனம் காத்தனர். தொடர்ந்து இவர்களின் திருமணம் இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்றது.
5 வருட திருமண கொண்டாட்டம்: திருமணமாகி 5 வருட கொண்டாட்டத்தை கடந்த ஆண்டில் இருவரும் வெளிநாட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர். 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்தனர். குழந்தை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருவரும் இருந்த நிலையில், தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதைவிட வேகமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விஷயங்கள் குறித்தும் எதுவும் பேசாமல் தொடர்ந்து இருவரும் வழக்கம் போல மௌனம் காத்து வருகின்றனர்.

தீபிகா -ரன்வீர் இடையே சண்டை: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தீபிகா மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும் இதையடுத்து தீபிகாவை ரன்வீர் அடித்து விட்டதாகவும் இதனால் கோபித்துக் கொண்டு தீபிகா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாலிவுட்டின் பிரபல திரை விமர்சகர் உமைர் சந்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திரையுலக நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து பதிவிட்டுவரும் உமைர் சந்துவின் இந்த பதிவு தீபிகா மற்றும் ரன்பீர் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோன் கர்ப்பம்: தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த ஃபாப்தா நிகழ்ச்சியில் அவர் ரெட் கார்ப்பெட்டில் நடந்தபோதுகூட தன்னுடைய வயிற்றை மறைத்தபடி நடந்து சென்றது அவரது ரசிகர்களை இதுகுறித்து உறுதி செய்ய வைத்துள்ளது. இதுகுறித்து இருவரும் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்த்துள்ள ரசிகர்களுக்கு இவர்களின் விவாகரத்து குறித்த தகவல்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications