Fighter Teaser: பதானை விட பதற வைக்கிறாரே தீபிகா படுகோன்.. டாம் க்ரூஸுக்கு டஃப் கொடுத்த ஹ்ரித்திக்!
மும்பை: இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவுக்கு வந்த ஷாருக்கானுக்கு மட்டுமின்றி பாலிவுட் திரையுலகத்திற்கே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தந்தது.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும் அந்த படத்தில் காவி பிகினி உடையில் தீபிகா படுகோன் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி பாய்காட் பதான் ஹாஷ்டேக் எல்லாம் டிரெண்டானது.

ஆனால், அதையெல்லாம் தாண்டி படம் வெளியானதும் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில், அதை விட டபுள் மடங்கு கவர்ச்சியை தீபிகா படுகோன் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்துள்ள ஃபைட்டர் படத்தில் கொடுத்துள்ளார். அதன் டீசர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.
ஃபைட்டர் டீசர் ரிலீஸ்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தின வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. படத்தின் டீசர் காட்சிகள் அனைத்துமே தாறுமாறாக உள்ளன.
டாம் க்ரூஸுக்கே டஃப்: இந்த ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் திரைப்படத்தில் ஃபைட்டர் ஜெட் காட்சிகள் நிறைந்திருந்தன. அதே போல இந்த ஃபைட்டர் படமும் பெயரை போலவே ஃபைட்டர் ஜெட் படமாகவே உருவாகி உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுப்பது போல ஃபைட்டர் ஜெட் ஓட்டும் காட்சிகளில் நடித்துள்ளார்.
தாராள குடோன் தீபிகா படுகோன்: ஷாருக்கானின் பதான் படத்தில் கவர்ச்சி கடலாக பிகினி உடைகளில் ரசிகர்களை சூடேற்றிய தாராள குடோன் தீபிகா படுகோன் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் சேலை கட்டிக் கொண்டு ஹோம்லி லுக்கில் மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில், மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தில் ஒரே ஒரு சீனில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் கடலில் கட்டிப்புரண்டு பிகினியில் கிஸ் அடிக்கும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஆண்டும் சித்தார்த் ஆனந்த் படம் 1000 கோடி வசூல் ஈட்டுவது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











