Fighter: பதானை விட பத்து மடங்கு.. ஒவ்வொரு ஃபிரேமும் ஜூமிங் தான்.. திணறடிக்கும் தீபிகா படுகோன்!
மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் அடுத்தாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து ’இஸ்க் ஜெய்ஸா குச்’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வரும் ஜனவரி மாதத்துடன் 50 வயதை கடக்க உள்ளார். இந்த வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வேற லெவல் பாடியுடன் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை தீபிகா படுகோன் பதான் படத்தை விட 10 மடங்கு அதிக கவர்ச்சியை காட்டித் திணற அடித்துள்ளார்.

தீபிகாவுக்கு தடை வருமா?: ஓடிடி தளங்களில் அதிக ஆபாச படங்கள், கவர்ச்சி வீடியோக்கள் இடம்பெற்று இளைஞர்களை கெடுத்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அதைவிட மேலாக ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களையும் உசுப்பேற்றி வரும் தீபிகா படுகோன் இப்படி டூபீஸில் நடிக்க ஏதாவது தடை வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த அளவுக்கு கிறங்கடிக்கும் காட்சிகளில் கொஞ்சம் கூட தயக்கமின்றி நடித்து தாறுமாறு காட்டி வருகிறார்.
சும்மா அள்ளுது: தீபிகா படுகோன் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து வேற லெவல் கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்து இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார். நீச்சல் உடையில் பீச் பம் எல்லாம் காட்டி அவர் போடும் ஆட்டம் இருக்கே அப்பப்பா சும்மா அள்ளுது.
ஒவ்வொரு பிரேமிலும் ஜூமிங் தான்: ஃபைட்டர் டிரெய்லர் முழுக்க டாம் க்ரூஸின் டாப் கன் படத்தையும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தையும் பார்த்தது போல சும்மா ஏரிலேயே ஃபைட்டர் ஜெட் ஓட்டிக் கொண்டு வித்தைக் காட்டிய நிலையில், இந்த ஒரே ஒரு பாடல் காட்சியின் உச்சக்கட்ட சீன் இடம்பெற்றிருந்ததை டீசரிலேயே ரசிகர்கள் கிராப் செய்து ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால் தற்போது, அல்வா மாதிரி மொத்த பாடலும் கிடைத்த நிலையில் ஒவ்வொரு காட்சியையும் ப்ரீஸ் பண்ணி ஜூம் பண்ணி தீபிகா படுகோன் அழகை ரசித்து வருகின்றனர்.
காவி கலர் இல்லை: நல்ல வேளையாக இந்த பாடலில் காவி கலர் உடையணிந்து தீபிகா படுகோன் கவர்ச்சி நடனம் போடவில்லை. இல்லையென்றால் பாய்காட் கேங் கூட்டமாக கிளம்பி இருப்பார்கள். ஆனால், படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ஃப்ரீ புரமோஷனும் மிஸ் ஆகி விட்டது அதனால் என்று தான் சொல்ல வேண்டும்.
ஃபயர் விடும் ஃபேன்ஸ்: பாலிவுட்டில் உர்ஃபி ஜாவேத் எல்லாம் பிகினி அணிந்து கொண்டு பில்டப் பண்ணி வரும் நிலையில், லீடு ஹீரோயினாக வலம் வரும் தீபிகா படுகோன் தொடர்ந்து பதான், ஃபைட்டர் என எல்லா படங்களிலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி என்டர்டெயின்மென்ட் குயின் என்பதை நிரூபித்து வருகிறார். பதான் பாடல் போல இந்த பாடலும் வெளியான சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ் அள்ளி வருகிறது. கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் எல்லாம் சும்மா ஃபயர் விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











