Deepika Padukone Networth: வாழ்ந்தா இப்படி ராணி மாதிரி வாழணும்... தீபிகா படுகோன் சொத்து மதிப்பு!!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகில் அறிமுகமான 17 ஆண்டுகளில் பாலிவுட்டின் ராணி மாதிரி பல கோடி சொத்துகளுடன் வாழ்ந்து வருகிறார் தீபிகா படுகோன்.

தீபிகா படுகோன் சொத்து மதிப்பு தெரியுமா
கன்னடத்தில் ஐஸ்வர்யா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதன்பின்னர் நேரடியாக பாலிவுட் சென்ற அவருக்கு அவ்வளவு எளிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சான்ஸ் கேட்டு சென்ற இடமெல்லாம், தீபிகாவின் உயரத்தையும் ஒல்லியான உடல் தேகத்தையும் மைனஸாக சொல்லி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஆரம்பத்தில் கிடைத்த பல அவமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நம்பர் 1 நாயகியாக மாஸ் காட்டி வருகிறார்.

 Deepika Padukone Networth: Deepika Padukone’s net worth stands at Rs 500 crore in 2024

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தீபிகா படுகோன். முதல் படம் கொடுத்த ப்ளாக் பஸ்டர் வெற்றியால் பாலிவுட்டே அவரை கொண்டாடத் தொடங்கியது. அதன் பின்னர் தீபிகாவின் சினிமா கேரியரில் நடந்தது எல்லாமே மேஜிக் தான். சல்மான், கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், சயிஃப் அலிகான் என பாலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் தீபிகா.

அதற்கும் மேலாக ஹாலிவுட்டில் XXX: Return of Xander Cage படத்திலும் நடித்து கெத்து காட்டினார். கடந்தாண்டும் ஷாருக்கானுடன் பதான், ஜவான், ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரபாஸுடன் கல்கி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 2018ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் தீபிகாவின் சொத்து மதிப்பு 500 கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம் தீபிகா படுகோன். அதேபோல், விளம்பரங்களில் நடிக்க 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர பல மாடல் நிறுவனங்களில், ஸ்கின் கேர் தயாரிப்பு நிறுவனங்களில் பார்ட்னராகவும் தீபிகாவுக்கு வருமானம் கிடைக்கிறது.

அதன்படி ஆண்டுக்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறாராம். இதுபோக தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்கும் கோடிகளில் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோன் 2013ல் பிரபாதேவி பகுதியில் 16 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கினார். தீபிகா படுகோனேவின் கணவர் ரன்வீர் சிங் பாந்த்ரா பகுதியில் ரூ.119 கோடி மதிப்புள்ள பங்களாவை தீபிகாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார். இது ஷாருக்கின் மன்னத் வீட்டிற்கு அடுத்ததாக 11,266 சதுர அடியில் பிரம்மாண்டமாக உள்ளது.

இதுமட்டும் இல்லாமல் தீபிகா படுகோன் வசிக்கும் அபார்ட்மெண்டின் விலை ரூ.40 கோடி எனவும், அலிபாக்கில் இருக்கும் வீட்டின் மதிப்பு ரூ.22 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதுதவிர மும்பை, பெங்களூரு பகுதிகளிலும் தீபிகா படுகோனுக்கு பல கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. அதேபோல், தீபிகா படுகோன் சொந்தமாக பல சொகுசு கார்கள் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பாலிவுட்டில் ஒரு மஹாராணி போல வாழ்ந்து வருகிறார் தீபிகா படுகோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X