‘லிப்லாக்‘ காட்சியில் நடிக்க கணவரின் அனுமதி பெற்றீர்களா? நிருபரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த தீபிகா!

சென்னை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் ஏடாகூடமான கேள்வி கேட்க, அதற்கு அவர் தடாலடியாக பதிலளித்துள்ளார்.

டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தீபிகா தமிழ் ரசிகர்களுக்கு புதியவரல்ல. கோச்சடையானில் அனிமேஷன் உருவாக தோன்றியிருந்தாலும் கூட, பெரும்பாலும் தமிழ் ஓடிடி, பிறமொழித் திரை ரசிகர்களுக்கு தீபிகா படுகோனின் படங்கள் எப்போதுமே பெரும் வரவேற்பை பெரும்..

கெஹ்ரையான்

கெஹ்ரையான்

தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெஹ்ரையான் திரைப்படம் பிப்ரவரி 11ந் தேதி அதாவது நாளை அமேசான் ப்ரைம் ஒடிடியில் வெளியாக உள்ளது. அதில் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி மற்றும் தைரிய கர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல முத்தக்கட்சிகள்

பல முத்தக்கட்சிகள்

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது இதில், பல முத்தக்காட்சிகளும், குளியலறை, படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சிக்கலான காதல் கதை

சிக்கலான காதல் கதை

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் விகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த கெஹ்ரையன் படம், சிக்கலான நவீன உறவுகளை கொண்ட ஒரு கதையாகும். இப்படத்தில், தீபிகா ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவரின் கணவர் கரன், தீபிகாவின் தங்கை டியாவுக்கு நிச்சயமான ஜெயினுடன் தீபிகாவுக்கு காதல் மலர்ந்து, உறவு சிக்கலாகிறது இது தான் கெஹ்ரையான் திரைப்படத்தின் கதை.

ரன்வீர் சிங்கிடம் கேட்டீங்களா?

ரன்வீர் சிங்கிடம் கேட்டீங்களா?

இத்திரைப்படம் அமேசானில் நாளை வெளியாக உள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு தீபிகா பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் கெஹ்ரையான் திரைலப்படத்தில் லிப்லாக் காட்சிகள், குளியல் அறை காட்சிகள், நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு கணவர் ரன்வீரிடம் அனுமதி பெற்றீர்களா என்று கேட்டார்.

ரன்வீர் பெருமைப்படுகிறார்

ரன்வீர் பெருமைப்படுகிறார்

இதற்கு, பதிலளித்த தீபிகா, ரன்வீர் சிங் இந்த படத்தை பார்த்தார், திரையில் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீர் மிகவும் பெருமையாக நினைக்கிறார் என்றார். மேலும் தனது நடிப்பைப் பார்த்து அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் தீபிகா படுகோனே கூறியுள்ளார்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X