திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே.. அய்யோ என்ன ஆச்சு.. பதறிய படக்குழு !

ஹைதராபாத் : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் மந்திர சிரிப்பும் மயக்கும் அழகுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நடிகை தீபிகா பத்மாவதி திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உடல்நலம் பாதிப்பு

உடல்நலம் பாதிப்பு

இந்நிலையில், தீபிகா படுகோனே நடித்து வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு நடிகை தீபிகா படுகோனே அருகில் உள்ள 'காமினேனி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென அதிகரித்த பீபி

திடீரென அதிகரித்த பீபி

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு, உடல்நலம் சரியானது. இதனையடுத்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா படுகோனே அங்குள்ள நோவேட்டல் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார். தீபிகா படுகோனேவுக்கு திடீரென பீபி அதிகரித்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் ஓய்வில்லாமல் இருந்ததால், தீபிகா பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

இருப்பினும், தீபிகாவின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ எந்த தகவலும் வரவில்லை. அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபிகா படுகோனேவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்..

 Project K படப்பிடிப்பில்

Project K படப்பிடிப்பில்

ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தினை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர், இந்த படத்தினை நாக் அஷ்வின் இயக்குகிறார். இது தவிர, ஷாருக்கானின் பதான் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் தீபிகா படுகோனா பிஸியாக நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X