“ஜூரியாக நான்“.. கனவிலும் கற்பனை செய்யாத ஒன்று.. கேன்ஸ் விழாவில் தீபிகா படுகோனே நெகிழ்ச்சி !
பிரான்ஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு நிகழ்வான இந்திய பெலிலியன் திறப்பு விழாவில் பேசிய நடிகை தீபிகா படுகோனே, ஜூரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று நெகிழ்ந்து பேசினார்.
Recommended Video

கோலாகலமாக தொடங்கி உள்ள இந்த சர்வதே திரைப்பட விழா மே28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மிஷிங் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் மற்றும் ஹாலிவுட் என 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் கமல்ஹாசன், நடிகர் மாதவன், தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெலிலியன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, எனது நடிப்புக்கும்,எனது திறமைக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரியாகும் வாய்ப்பு கிடைத்திருப்பது எதிர்பார்க்காத ஒன்று, நான் கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று. 15 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு பிறகு இது ஒரு நம்பமுடியாத பயணமாக இருக்கிறது என்றார். அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து பேசிய தீபிகா, இந்தியாவின் வளர்ச்சி மகத்தானதாக உள்ளது. இது ஆரம்பம் மட்டுமே.. இந்தியா கேன்ஸில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நம்பும் ஒரு நாள் வரும். அந்த நாளில், கேன்ஸ் விழா இந்தியாவில் நடைபெறும் என்று தீபிகா படுகோனே பேசினார். இந்த இந்திய பெலிலியன் திறப்பு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டார்.
கேன்ஸ்விழாவின் 2வது நாளில், தீபிகா படுகோனே முழுக்க முழுக்க கருப்பு நிற உடையில் அனைவரும் அசத்தும் வகையில் இருந்தார். இந்த விழாவில் தீபிகா படுகோனே பேசியது, சமூகவலைத்தளத்தில் மிகவும் டிராண்டாகி வருகிறது. எட்டு ஜூரிகளில் ஒருவராவார் தீபிகா படுகோனே, திரைப்பட விழாவில் அழகான தோற்றத்துடன் அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











