உங்களால் முடியுமா? கணவருக்கு சவால் விட்ட தீபிகா படுகோனே..இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கே!

மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சவால் விட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கே என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

உங்களால் முடியுமா? கணவருக்கு சவால் விட்ட தீபிகா படுகோனே..இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கே!

2006ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் அறிமுகமான தீபிகா படுகோனே, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் மந்திர சிரிப்பும் மயக்கும் அழகுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நடிகை தீபிகா பத்மாவதி திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில் வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் 2 நாட்கள் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். தீபிகா திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

படு பிஸி

படு பிஸி

தற்போது அவர் சர்க்கஸ், பதான், ப்ராஜெக்ட் கே, ஜவான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா தனது கிளாமர் போட்டோ ஷுட் போட்டோக்கள், கணவர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்புவார்.

கணவருக்கு சவால்

கணவருக்கு சவால்

இந்நிலையில், தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 30 வினாடிகளுக்குள் காலில் எத்தனை சாக்ஸை அணிய முடியும் என்று கேட்டு தனது கணவர் ரன்பீர் சிங்கிற்கு சவால் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் தீபிகா 30 வினாடிக்குள் தனது காலில் 9 சாக்ஸ்களை போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இதுசின்ன புள்ளத்தனமா இருக்கே என்று தீபிகாவை கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X