2 வருஷம் வாழ்ந்துட்டு இத்தனை கோடி ஜீவனாம்சமா?.. சாஹல் மனைவி ’டாக்ஸிக் காதல்’ பாடல் வேற!
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி இருவரும் விவாகரத்து பெற்று அதிகாரப்பூர்வமாக பிரிந்த நிலையில், ஜீவனாம்சம் தொடர்பான வழக்கும் முடிவுக்கு வந்தது. 4.75 கோடி ரூபாயை ஜீவனாம்சம் தொகையாக சாஹலின் மனைவியும் நடிகையுமான தனஸ்ரீ வர்மாவுக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
நீதிமன்றத்துக்கு வந்த கிரிக்கெட் வீரர் சாஹலின் டிசர்ட்டில் Be your own sugar daddy என்கிற வாசகம் இடம்பெற்ற நிலையில், இணையத்தில் அதுதொடர்பான விவாதங்கள் அதிகளவில் இடம்பெற்றன. இந்நிலையில், சாஹல் உடன் 2 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துவிட்டு பல கோடி ரூபாயை ஜீவனாம்சமாக வாங்கியுள்ள நடிகை தனஸ்ரீ வர்மா நேற்று வெளியிட்ட ஆல்பம் பாடல் வீடியோ மேலும், சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில், டாக்ஸிக் காதல் குறித்த தீம் இடம்பெற்ற நிலையில், பலரும் தனஸ்ரீ வர்மாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகை தனஸ்ரீ வர்மா: 2021ம் ஆண்டு வெளியான பலி பியார் சாஹியே படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தனஸ்ரீ வர்மா. ஜஸி கில் அண்ட் சிம் கவுர், அபர்சக்தி குரானா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். வீடியோ ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமான இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலை திருமணம் செய்துக் கொண்டார்.
2 வருஷம் கூட சேர்ந்து வாழல: திருமணத்துக்குப் பிறகும் நடித்து வந்த தனஸ்ரீ வர்மாவுக்கும் யுஸ்வேந்திர சாஹலுக்கும் இடையே சண்டைகள் வெடித்து வந்தன. சில கிரிக்கெட் வீரர்களுடன் தனஸ்ரீ வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. சண்டை பெரிதான நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடிவெடுத்தனர். 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
4.75 கோடி ஜீவனாம்சம்: 2 ஆண்டுகள் கூட இருவரும் சேர்ந்து வாழாத நிலையில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நடிகை தனஸ்ரீ வர்மாவுக்கு 4.75 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக சாஹல் கொடுக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளிலேயே 18 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் வாங்கி வரும் நிலையில், பல கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிக் காதல் ஆல்பம்: இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாக மார்ச் 20ம் தேதி தீர்ப்பு வெளியான நிலையில், நேற்றே நடிகை தனஸ்ரீ வர்மா யூடியூபில் தேகா ஜி தேக்கா மைனே எனும் வீடியோ பாடலை ரிலீஸ் செய்துள்ளார். இஷ்வக் சிங் எனும் நடிகருடன் இணைந்து தனஸ்ரீ வர்மா நடித்துள்ள ஆல்பம் பாடலை டி சீரிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. டாக்ஸிக் காதலின் வலிகளை சொல்லும் விதமாக அந்த பாடல் அமைந்த நிலையில், நீங்க தான் உண்மையான டாக்ஸிக் காதலி என சாஹலின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனஸ்ரீ வர்மாவை ட்ரோல் செய்து வருகின்றனர். அவரது புதிய ஆல்பம் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த பாடலை ஒரே நாளில் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











