இரவில் தனுஷ் யாரை துரத்துறாருன்னு பாருங்க.. நைட் டிரெஸ்ஸில் க்ரித்தி சனோன்.. லீக்கான ஸ்டில்ஸ்!

மும்பை: தமிழில் ஒரு பக்கம் இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ் இன்னொரு பக்கம் இந்தி படமான தேரே இஷ்க் மெயின் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், தனுஷை இயக்க வரிசை கட்டி பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான தனுஷ் மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ரங்கி ரே படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது தேரே இஷ்க் மெயின் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Dhanush and Kriti Sanon Tere Ishk Mein movie shooting spot stills leaked

பாலிவுட்டின் முன்னணி நடிகை க்ரித்தி சனோன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகிறது.

ஏற்றம் இறக்கம்: தனுஷ் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் நிலையில் அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ஏற்றமும் இறக்கமும் கண்டு வருகின்றன. அதேபோல அவர் நடித்து வரும் படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தும் திடீரென தோல்வியை தழுவியும் வருவதை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக மாறியது. குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க்கு மெயின் உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் சறுக்கிய நிலையில், ராயன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இளையராஜா பயோபிக்: கேப்டன் மில்லர் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அந்த படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இன்னொரு படம் கொடுக்க வேண்டும் என நினைத்த தனுஷ் இளையராஜா பயோபிக் படத்தை அவரையே இயக்க வைத்தார். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. படம் டிராப்பா அல்லது மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? என்கிற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கலாம்.

இட்லி கடை தள்ளிப் போனது: தல வந்தா தள்ளிதான போகணும் என விடாமுயற்சி படத்திற்கே வழிவிட்டு டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி இரு வாரங்களுக்கு தள்ளிப்போனது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக தனுஷ் ரிலீஸ் தேதி அறிவித்தாலும், கடைசி நேரத்தில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், அந்த கேப்பில் இந்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட மும்பைக்கு பறந்து சென்றுள்ளார்.

க்ரித்தி சனோனை துரத்தும் தனுஷ்: இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட காதல் பாடல் காட்சி போல லீக்கான புகைப்படங்களை பார்த்தால் தெரிகிறது. தனுஷ் முண்டா பனியன் உடன் இருக்க, க்ரித்தி சனோன் நைட் டிரெஸ்ஸில் மாடி படிகளில் இறங்க அவரை பின்னாடியே துரத்திக் கொண்டு தனுஷ் காதல் செய்வது போன்ற காட்சிகளை உருவாக்கியுள்ளனர். அதன் புகைப்படங்கள் லீக்கான நிலையில், படக்குழு ஷாக் ஆக்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த இயக்குநர் ஆனந்த் எல். ராய் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X