பாலிவுட் படத்தில் தமிழில் பேசும் தனுஷ்... வெளியானது அட்ராங்கி ரே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என்றும் கலக்கி வருகிறார்.
பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்துள்ள தனுஷ், ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அட்ராங்கி ரே ட்ரெய்லர்
இந்நிலையில் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்துள்ள அட்ராங்கி ரே படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , நடிகை சாரா அலி கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் " அட்ராங்கி ரே ". இந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார்.

இன்று ட்ரெயிலர் ரிலீஸ்
இந்தப் படம் காதல் மற்றும் இசை கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆப் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதன் ட்ரெயிலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டாம் பாதியில் அக்ஷய்குமாருடன்
3 நிமிடம் 8 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் முதல் பாதியில் நடிகை சாரா அலி கான் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையிலான காதல் கதை இடம்பெற்றுள்ளது. டிரைலரின் கடைசி பாதியில் அக்சய் குமார் மற்றும் சாரா அலி கான் இடையிலான காதல் கதை இடம்பெற்றுள்ளது.

தமிழில் பேசும் தனுஷ்
தனுஷ் மற்றும் அக்சய் குமார் என இருவரையும் காதலிக்கும் கதாபாத்திரமாக நடிகை சாரா அலி கான் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த ட்ரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் பல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











