தொடர்ந்து டிரெண்டிங்கில் தனுஷ்.. அடேங்கப்பா அதுக்குள்ள அந்த படத்தையும் முடிச்சிட்டாரா.. சிறப்பு!
மும்பை: நடிகர் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே என்ஓசி சண்டை வெடித்துள்ளதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், தனுஷ் தனக்கு பல வருடங்களாக உதவிக் கொண்டிருப்பவர் என்றும் சிம்புவை வைத்து தான் செய்யும் படத்துக்கு அவர் ஒரு பைசா கூட கேட்கவில்லை என பேசியதில் இருந்தே தனுஷை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான குபேரா திரைப்படம் 2வது வாரத்திலும் வெற்றிநடை போட்டு, 3வது வாரத்திலும் ராஜநடை போட்டு வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடித்து வந்த இந்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அவர் சோஷியல் மீடியாவில் புதிய போஸ்டருடன் அறிவித்த நிலையில், இந்தியளவில் டிரெண்டாகி வருகிறார்.

#Dhanush ஹாஷ்டேக்கில் தனுஷ் பற்றிய பல பாசிட்டிவ் கருத்துக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இட்லி கடை படம் முதலில் வெளியாகுமா அல்லது இந்தி படமான 'தேரே இஷ்க் மெயின்' படம் முதலில் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர்.
குபேரா வெற்றி: தமிழில் குபேரா திரைப்படம் வசூல் ரீதியாக அடிவாங்கினாலும், தெலுங்கில் அந்த படம் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான குபேரா திரைப்படம் 120 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியதாக தகவல்கல் வெளியாகி உள்ளன. ஓடிடி வியாபாரம், டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என குபேரா படத்தை தயாரித்தவர்களுக்கு லாபம் தான் என்கின்றனர்.
தேரே இஷ்க் மெயின் படப்பிடிப்பு ஓவர்: குபேரா புரமோஷனுக்காக சென்னை, ஹைதராபாத் என சுற்றிக் கொண்டிருந்த தனுஷ் குபேரா படத்தை சென்னையில் பார்த்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் கலந்துக் கொண்டார். அதன் பின்னர், மீண்டும் மும்பைக்கு பறந்த அவர், க்ரித்தி சனோன் உடன் இணைந்து நடித்து வந்த இந்தி படமான தேரே இஷ்க் மெயின் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அப்டேட்டை தனது சமூக வலைதள பக்கங்களில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இட்லி கடை டப்பிங் ஆரம்பம்: தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தில் அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த படத்தின் படப்பிடிப்பையும் தனுஷ் சில மாதங்களுக்கு முன்னதாக முடித்து விட்டார். அந்த படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகளை தனுஷ் இந்த வாரம் தொடங்கி முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்கப் போகிறார் என்றும் ஜூலை மாத 2வது வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கி விடும் என்றும் கூறுகின்றனர்.
தொடர் டிரெண்டிங்கில் தனுஷ்: சோஷியல் மீடியாவில் தனுஷ் குறித்த பல நெகட்டிவிட்டி கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று வெற்றிமாறன் அளித்த விளக்க வீடியோ தீயாக பரவி வருகிறது. #Dhanush ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். தனுஷ் நயன்தாராவை தொடர்ந்து சிம்புவுக்கு எதிராகவும் NOC கேட்டு விட்டார் என கிளம்பிய வதந்திகளால் கடுப்பாகி திட்டிய சிம்பு ரசிகர்களும் தற்போது தனுஷை பாராட்டி வருகின்றனர். விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு தனுஷ் அப்துல் கலாம் பயோபிக் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அஜித் குமாருக்கும் தனுஷ் கதை சொல்ல ஆயத்தமாகி வருவதாகவும் ஜூலை மாதத்தில் அஜித்தையும் அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











