போனி கபூர் மகன் டாக்ஸிக்கா?.. மலைகா அரோரா போட்ட போஸ்ட்.. அர்ஜுன் கபூரை தொடர்ந்து இவங்களும்!
மும்பை: 51 வயதான நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட மலைக்கா அரோராவுக்கு 22 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அப்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்த மலைக்கா அரோரா பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் மற்றும் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் சிங்கிளாக இருப்பதாக அர்ஜுன் கபூர் தெரிவித்த நிலையில், தற்போது மலைக்கா அரோராவும் தனது பிரேக்கப்பை அறிவிக்கும் விதமாக இந்தப் போஸ்ட் அமைந்துள்ளதாக ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.
சரக்கு அடிக்கக் கூடாது: நோ நட் நவம்பர் என இளைஞர்கள் ஒரு பக்கம் நவம்பர் மாதத்தில் அந்த விஷயத்தை பண்ணவே கூடாது என பிடிவாதம் பிடித்து இருந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும் எதையெல்லாம் செய்யக்கூடாது என்கிற பட்டியலை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார் நடிகை மலைக்கா அரோரா. அதில் முதலாவதாக சரக்கு அடிக்கக்கூடாது என பதிவிட்டுள்ளார்.
நவம்பர் மாத லிஸ்ட்: வொர்க்கவுட் ஃப்ரீக்கான மலைகா அரோரா திடீரென நவம்பர் மாதம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும் எதையெல்லாம் செய்யக் கூடாது என்றும் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில், நோ ஆல்கஹால், தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும், காலை 10 மணி வரை சாப்பிடக் கூடாது, இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது மற்றும் டாக்ஸிக் மனிதர்களுடன் சேரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் கபூருடன் பிரேக்கப்: தன்னை விட 12 வயது குறைந்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்தும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வந்தார் மலைக்கா அரோரா. இவர்கள் இருவரும் சீக்கிரமே பிரேக்கப் செய்து விடுவார்கள் என்றும் இந்த காதல் கத்தரிக்காய் கதையெல்லாம் நிஜம் கிடையாது என பலரும் ட்ரோல் செய்து வந்தனர். அடிக்கடி மலைக்கா அரோரா அர்ஜுன் கபூரை பிரேக்கப் செய்து விட்டார் என்றும் அர்ஜுன் கபூர் மலைக்காவை கழட்டிவிட்டு விட்டார் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பி வந்தன. அதெல்லாம் தற்போது உண்மையாகவே மாறிவிட்டது என்கின்றனர். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜுன் கபூர் தான் இப்போ சிங்கிள் தான் எனக் கூறியது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
அர்ஜுன் கபூரை சொல்றாரா?: இந்நிலையில், டாக்ஸிக் மனிதர்களுடன் சேர வேண்டாம் என திடீரென மலைக்கா அரோரா குறிப்பிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் கபூரைத் தான் அப்படி சொல்கிறார் எனக் கூறி வருகின்றனர். மேலும், மலைக்கா அரோராவும் பிரேக்கப்பை இப்படி உறுதிப்ப்டுத்தி விட்டார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மலைக்கா அரோரா தனது கணவரை பிரிந்தாலும் மகனுடன் தற்போது வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் கபூருக்கு விரைவிலேயே நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











