A6 movie: அடுத்த ஆண்டில் சூட்டிங் துவங்கும் சல்மான் கான் -அட்லி படம்.. சல்மானுடன் இணையும் கமல்?
மும்பை: ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்தது. 1000 கோடி கிளப்பிலும் இணைந்தது. இந்த படத்தை ரசிகர்கள் குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து அட்லிக்கு பாலிவுட்டில் ஒரு தனி இடம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் அட்லி இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த படத்தில் சல்மானுடன் அட்லி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் சல்மானுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் அட்லி: இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் ஜவான். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அவர் என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்ற நிலையில் அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி படத்தை 1000 கோடி கிளப்பில் இணைத்திருந்தார். இந்த படத்தை எடுத்து முடிக்க அவருக்கு ஏறக்குறைய நான்காண்டுகள் பிடித்த நிலையில் படம் ரசிகர்களை குறிப்பாக வட இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
சல்மான் கான்-அட்லி கூட்டணி: மேலும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் எந்த ஹீரோ நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் அட்லி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட்டிலேயே தன்னுடைய அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவருடன் கமல்ஹாசன் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசனா.. ரஜினிகாந்தா?: முன்னதாக படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கூறப்பட்டது. அட்லி தான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று கூறிவரும் சூழலில் முன்னதாக ரஜினியை சல்மான் கானுடன் இணைத்து இந்த படத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்தப் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல முன்னதாக ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து படம் இயக்கவுள்ளதாக அட்லி கூறிவந்த நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் அந்த பிராஜெக்ட் கேள்விக்குறியாகி உள்ளது.
மல்ட்டி ஸ்டார் படம்: இதனிடையே, சல்மான் கானுடன் அட்லி இணையுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் அதிகமாக மல்டி ஸ்டாரர் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாகவே வெளியானது. இதுபோல அடுத்தடுத்த இயக்குனர்கள் படங்களை இதே கேட்டகரியில் இயக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











