Producer Atlee: பூஜையுடன் துவங்கிய தெறி ரீமேக்.. கலக்கல் பாலிவுட் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

மும்பை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து ஷாருக்கானுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தார் அட்லீ. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அட்லீயின் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இயக்கும் படம் இல்லை. அவரது தயாரிப்பில் வருண் தவான் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது.

தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ள இந்தப் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ், சினி 1 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன. படத்தை அவரது உதவி இயக்குநர் காலீஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அட்லீ தெரிவித்துள்ளார்.

Director Atlee -Varun Dhawan combination movie VD18 shooting starts with grand Pooja

ஜவான் படம்: இயக்குநர் அட்லீ -ஷாருக்கான் கூட்டணியில் கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்த படம் ஜவான். முன்னதாக விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களையும் ஆர்யாவின் ராஜா ராணி படத்தையும் இயக்கி வெற்றிப்பட இயக்குநர்கள் வரிசையில் இணைந்த அட்லீ, ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதன்மூலம் அவரது மார்க்கெட் வேல்யூவும் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது அடுத்தப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவரது தயாரிப்பில் முன்னதாக அறிவிக்கப்பட்ட படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

VD18 படத்தின் பூஜை: பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ள வருண் தவான் லீட் கேரக்டரில் நடிக்க தெறி படத்தின் ரீமேக்கை தற்போது தயாரிக்கவுள்ளார் அட்லீ. படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்தப் படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட படத்தின் பூஜையில் இவர்கள் இருவரும் கலக்கலாக பங்கேற்றனர். குறிப்பாக மஞ்சள் நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் கலக்கலான கெட்டப்பில் அனைவரையும் கவர்ந்தார்.

அட்லீ தயாரிப்பில் VD18: அடுத்ததாக ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். இந்தப் படம் உருவாகும்பட்சத்தில் 3000 கோடி ரூபாய் கலெக்ஷனை படம் உருவாக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதற்கு முன்னதாக ஒரு படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் அட்லீ இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தயாரிப்பாளராக தன்னுடைய பணிகளை அவர் துவக்கியுள்ளார். இந்த படப்பூஜையில் அவரது மனைவி பிரியாவும் சிறப்பான கெட்டப்பில் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்தார்.

அட்லீ தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தையும் சேர்ந்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தின்மூலம் 4 படங்களை அட்லீ தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிடிவக்கின்றன. தமிழில் 2 படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என அட்லீ அடுத்தடுத்த படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுளள்து. இந்தப் படங்களில் இயக்குநர், நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் ஒரு படத்தையும் தயாரிக்காத நிலையில் ஒரே நேரத்தில் 4 படங்களை இயக்க அட்லீ திட்டமிட்டுள்ளது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X