‘தீபிகா‘ இல்லை என்றால்.. கல்கி படமே இல்லை.. இயக்குநர் நாக் அஸ்வின் பேட்டி!
மும்பை: அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த 'கல்கி 2898 AD' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்த இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் படம் குறித்து முக்கியமான தகவலை பேட்டி ஒன்றில் கூறியுள்ளர்.
மகாபாரத கதையின் மறு உருவாக்கம் போல எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். படம் முழுவதும் கூடவே பயணிக்கும் 'புஜ்ஜி' என்ற காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார். பான் இந்திய திரைப்படமான வெளியான இப்படம் 1000 கோடியை வசூலைத்து சாதனை படைத்தது.

கல்கி 2898 AD : குருக்ஷேத்திர போரில் அஸ்வத்தாமனுக்கு கிருஷ்ணர் 'உனக்கு சாவே கிடையாது' அதுவரை நீ இந்த உலகத்தில் நடக்கும் அழிவை பார்க்க வேண்டும். கலியுகத்தில் கலியை அழிக்க நான் அவதாரமெடுப்பேன். என்னை காப்பாற்றும் போது உன் சாபம் தீரும் என அஸ்வத்தாமாவுக்கு அவரது சிரோன்மணியை பிடுங்கி விட்டு சாபம் கொடுப்பார் கிருஷ்ணர் . போர் முடிந்து 6000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தப் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று கூறப்படும் கல்கி அவதாரம், தீபிகா படுகோனின் கருவில் இர வளர்கிறது. குழந்தை கல்கியை காப்பாற்ற அஸ்வத்தாமன் போராடுகிறார். இந்த குழந்தையை கொல்ல, வில்லன் யாஸ்கின் வேலைகளை செய்கிறார். கடைசியில் கல்கி அவதாரம் எடுத்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் தீபிகா படுகோன கர்ப்பினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கதையே இல்லை: கல்கி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் இயக்குனர், நாக் அஸ்வின், தீபிகா படுகோனே நடித்த கதாபாத்திரத்தின் முக்கியத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதில், தீபிகா படுகோனே தான் கல்கி கதையில் மிக முக்கிய பங்கு வருகின்றார். அவருடைய கதாபாத்திரத்தை நீக்கினால், கல்கியே இல்லை, கதையே இல்லை என்றார். கல்கி திரைபடத்தின் இரண்டாம் பாதிக்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பாடத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருப்பதாக இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்தார். இயக்குநர் இவ்வாறு கூறி இருப்பதால், இரண்டாம் பாகத்திலும் தீபிகா படுகோனோ சுமதி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











