ஹவா ஹவாய்.. ஸ்ரீதேவிய எப்படி ஆட வச்சார் தெரியுமா? சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்!
சென்னை: மறைந்த பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான். 71வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மும்பை பந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

பல ஹிட் பாடல்கள்
அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீர் மாரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு மும்பை மாலட் பகுதியில் நடைபெற்றது. சரோஜ் கான், பல ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார்.

டான்ஸ் மூமென்ட்ஸ்
இசைக்கும் வார்த்தைக்களுக்கும் ஏற்ப டான்ஸ் மூமென்ட்களை கொடுப்பதில் வல்லவரான சரோஜ் கான், ஐஸ்வர்யா ராய், மாதிரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

ஷேகர் கபூர் உருக்கம்
அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரான ஷேகர் கபூர், தனது மிஸ்டர் இந்தியா படத்தில் சரோஜ் கான் நடன இயக்குநராக பணியாற்றியதை உருக்கமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஹவா ஹவாய் பாடல்
மிஸ்டர் இந்தியா படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஸ்ரீதேவியும் அனில் கபூரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு மாஸ்டர் சரோஜ் கான் கோரியோகிராப் செய்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஹவா ஹவாய் பாடல் பெரும் ஹிட்டானது.

வெற்றிக்கு காரணம்
அந்தப் பாடலில் ஆரம்பம் முதல் கடைசி வரை அவ்ளோ எனர்ஜிட்டிக்காக ஆடியிருப்பார் ஸ்ரீதேவி. அந்த பாடல் அத்தனை பெரிய வெற்றியை பெற சரோஜ் கான் தான் காரணம். இந்நிலையில் மிஸ்டர் இந்தியா படத்தின் இயக்குர் ஷேகர் கபூர் சரோஜ் கானுடன் பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

என்ன எனர்ஜி!
தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அவர் ஒரு தலைமுறை கதாநாயகிகளை வரையறுத்தார். நிச்சயமாக மிஸ் இந்தியா, சரோஜ் கான் இல்லாமல் ஒரே படமாக இருந்திருக்காது. ஸ்ரீதேவியுடன் ஒத்திகை பார்த்தபோது அவருடைய நடனத்தைக் காண வேண்டியிருந்தது. அவர் மயக்கினார். என்ன எனர்ஜி! நீங்கள் இரவு முழுவதும் ஷுட் செய்தாலும் அவர் சிரிப்புடன் தொடர்ந்து ஃபிரஷாக நடனமாடினார் என உருக்கமாக அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











