திஷா பதானியும் கீர்த்தி சனோனும் லிப் கிஸ்?.. எல்லை மீறும் Grok.. எல்லாம் எலான் மஸ்க் பார்த்த வேலை?

மும்பை: ட்விட்டரில் புதிதாக Grok AI வசதியை எலான் மஸ்க் நெட்டிசன்கள் கையில் அறிமுகப்படுத்திய நிலையில், ஏகப்பட்ட ஆபாச கற்பனை ஏஐ போட்டோக்கள் ட்விட்டரில் டிரெண்டாகி பகீர் கிளப்பி வருகின்றன. சினிமா பிரபலங்கள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது போன்று போட்டோ வேண்டும் என்று கேட்ட உடனே க்ரோக் ஏஐ அப்படியே ஆகட்டும் என வரம் கொடுக்கும் பூதம் போல போட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு வருகிறது.

இதில், அதிகமாக டீப் ஃபேக் போட்டோக்களைத் தான் நெட்டிசன்கள் ரெக்வஸ்ட் கொடுத்து கேட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வன்மத்தை கக்கி வருகின்றனர். திடீரென இன்று நடிகை #KritiSanon ஹாஷ்டேக் டிரெண்டான நிலையில், அதில் முழுக்க முழுக்க பிகினியில் அவர் இருக்கும் ஏஐ புகைப்படங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

kriti sanon disha patani ai

மேலும், கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை திஷா பதானியும் கீர்த்தி சனோனும் லிப் கிஸ் கொடுப்பது போன்ற போட்டோக்களும் அதிகம் இடம்பெற்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளன.

எலான் மஸ்க் பார்த்த வேலை: உலகம் முழுவதும் AI எனும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதை வில்லனாக்கி டாம் க்ரூஸ் மிஷன் இம்பாசிபிள் படத்தையே உருவாக்கியுள்ளார். மேலும், பல ஹாலிவுட் படங்களில் ரோபோக்கள், ஏலியனை தாண்டி தற்போது ஏஐ தான் வில்லனாக மாறி வருகிறது. அனைத்து தொழில்களையும் ஏஐ தொழில்நுட்பம் புகுந்து பலரது வேலைக்கு வேட்டு வைத்து வரும் நிலையில், தனது ட்விட்டர் பயனாளர்களுக்கு இலவசமாக GROK எனும் ஏஐ டூலை ட்விட்டரில் எலான் மஸ்க் கொடுத்துள்ளார்.

கீர்த்தி சனோன் - திஷா பதானி லிப் லாக்: எந்தவொரு டெக்னாலஜி கிடைத்தாலும் அதை நல்ல வழியில் பயன்படுத்த சிலர் நினைத்து வந்தால், அதை தப்பான வழிகளுக்கு பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ட்விட்டர் ஆபாச கூடாரமாக மாறி வரும் நிலையில், தற்போது கொடுக்கப்பட்ட Grok மூலம் நெட்டிசன்கள் திஷா பதானி மற்றும் கீர்த்தி சனோனை ஓரினச்சேர்க்கையாளர்களாகவே கற்பனையில் மாற்றி போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

kriti sanon disha patani ai

கண்டிப்பார்களா பிரபலங்கள்?: ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மற்றொரு கவர்ச்சி மாடல் உடலுடன் பொருத்தி வெளியான டீப் ஃபேக் வீடியோவுக்கு அமிதாப் பச்சன் முதல் பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ட்விட்டரில் தற்போது கிடைத்திருக்கும் க்ரோக் ஏஐ டூல் மூலமாக உருவாக்கப்பட்டு வரும் நடிகைகளின் டீப் ஃபேக் புகைப்படங்களுக்கு எதிராக பிரபலங்கள் கண்டனங்களை தெரிவிப்பார்களா? அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

kriti sanon disha patani ai

வக்கிரம் முத்திப்போச்சு: ட்விட்டரில் ஏற்கனவே நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் லீக் ஆவதாக இதே போன்ற ஏஐ வீடியோக்களை வெளியிட்டு பலரும் DM பண்ணுங்க என்றும் லிங்க் அனுப்புங்க என்றும் கேட்டு வரும் நிலையில், இப்படியொரு ஆப்ஷனில் ஆபாச காட்சிகள் உருவாகாமல் கட்டுப்பாட்டுகளை விதித்து வழங்கியிருக்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பிகினி போட்டோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். பல முன்னணி நடிகைகளே பிகினி போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், அதை தடுப்பது ரொம்பவே கடினம் தான் என்றும் AI மூலமாக தப்பான போட்டோக்களையும் வீடியோக்களையும் உருவாக்க முடியாதபடி தடை விதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X